அரியலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கதறவிட்டாங்கோ.. பதறவிட்டாங்கோ.. கொரோனா வார்டிலிருந்து டிக்டாக் செய்த பீனிக்ஸ் மால் பூஜா.. பூரண குணம்

அரியலூர் டிக்டாக் பெண் வார்டிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

அரியலூர்: "கதறவிட்டாங்கோ... பதறவிட்டாங்கோ.. பரவ விட்டாங்கோ.. வைரஸை பரப்பி விட்டாங்கோ.." என்று ரண கொரோனாவிலும் பெட்டில் படுத்து கொண்டே டிக்டாக் செய்த பூஜைவை நினைவிருக்கிறதா.. இப்போது சிகிச்சைக்கு பிறகு பூரண சுகமடைந்து ஒருவழியாக டிஸ்சார்ஜ் ஆனார் இந்த பீனிக்ஸ் மால் பெண் பூஜா!!

Recommended Video

    கொரோனா வார்டில் டிக்டாக் செய்த பூஜா பூரண குணமடைந்தார்

    சென்னையின் புகழ்பெற்ற பீனிக்ஸ் மாலில் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.. நிறைய பசை உள்ள பார்ட்டிகள்தான் இங்கு பெரும்பாலும் படையெடுத்து செல்வது வழக்ககம்.. இந்த மாலுக்குள்ளேயே நிறைய சர்வதேச வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.. அதனால் எந்நேரம் ஆயிரக்கானோர் இதற்குள் ஷாப்பிங் செய்வார்கள்.

    அறிகுறி

    அறிகுறி

    கடுமையான காய்ச்சல், சளி அறிகுறியால் கடந்த 20-ம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அவருக்கு உடனடியாக டெஸ்ட் செய்து பார்த்ததில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.. அதனால் பூஜாவை கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணித்தபடியே இருந்தனர்.

    வீடியோ

    வீடியோ

    தனிமைப்படுத்தப்பட்ட பூஜாவோ, சும்மா இல்லாமல் செல்போனில் டிக்டாக் செய்து வீடியோ எடுத்தார்.. அந்த வீடியோவை ஆஸ்பத்திரியில் உள்ள நர்ஸ்களிடம் ஓடி ஓடி சென்று காட்டி கொண்டிருந்தார்.. இவர்களை தவிர , ஒப்பந்த தூய்மை பணியாளர்களிடமும் அந்த வீடியோவை செல்போனில் காட்டி உள்ளார்.கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதால் அதை பற்றின சோக கீதத்தைதான் டிக்டாக் வீடியோவாக பூஜா பதிவிட்டிருந்தார்..

    வீடியோ

    வீடியோ

    "கொரோனா வைரஸ் வந்துச்சு நம்ம கிட்டதான்.. அது வந்துச்சுன்னா நம்ம எல்லாம் மட்டைதான்" கதறவிட்டாங்கோ, பதறவிட்டாங்கோ, பரவ விட்டாங்கோ.. வைரஸை பரப்பி விட்டாங்கோ.." "இப்படியே வாழந்தாக்கா புழு மட்டும் வாழும்டா, பூச்சி மட்டும் வாழுடா.. மனுஷ பய இடம் மட்டும் மண்ணாகி போகுமடா" என்று பெட்-டில் படுத்து கொண்டே டிக்டாக் வீடியோக்களை செய்திருந்தார்.

    கவிதைகள்

    கவிதைகள்

    இதையடுத்து, ஆஸ்பத்திரி நிர்வாகம் அவரை கண்டித்து, அறிவுரை சொல்லியது.. இதற்கு பிறகு சிகிச்சையில் இருக்கும்போது, டிக்டாக்கை விட்டுவிட்டு, கவிதைகள் எழுதியுள்ளார் பூஜா.. அடிக்கடி டிராயிங்கும் வரைந்துள்ளார்.. மொத்தமாக 28 நாட்கள் சிகிச்சை முடிந்தது..தொடர் கண்காணிப்பில் இருந்த பூஜாவுக்கு அடுத்தடுத்து டெஸ்ட்கள் 3 முறை சய்யப்பட்டன. இப்போது அந்த தொற்று முழுதும் நீங்கிவிட்டது.. இது டெஸ்ட்டிலும் உறுதியானது.

    டிஸ்சார்ஜ்

    டிஸ்சார்ஜ்

    இதையடுத்து அரியலூர் மாவட்ட ஆஸ்பத்திரியில் இருந்து பூஜா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.. வீட்டுக்கு கிளம்பும்போது அங்கிருந்த டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதார ஊழியர்களுக்கு நன்றியை சொன்னார். போகும்போது பூஜா சும்மா போகவில்லை.. ஒரு டிக்டாக் செய்துவிட்டுதான் போனார்.. "இனிமேல் டிக்டாக் செய்ய மாட்டேன், டிக்டாக்கை கைவிட்டுவிட்டேன்" என்பதுதான் அந்த கடைசி டிக்டாக்.. அதைதான் வீடியோவாக பதிவிட்டு கிளம்பி உள்ளார்.

    இந்த கொரோனா எத்தனையோ விஷயங்களை ஒவ்வொன்றாக மாற்றி வருகிறது.. அந்த வகையில் இதுவும் ஒரு நல்ல மாற்றமே!!

    அந்த வகையில் லைப்ஸ்டைல் கடை ஒன்று இங்கு இயங்கி வருகிறது.. அந்த கடையில் வேளச்சேரியை சேர்ந்த பூஜா என்ற பெண் வேலை பார்த்து வந்துள்ளார்.. அவரது சொந்த ஊர் அரியலூர்.. பொழுது போக்கிற்காக அடிக்கடி டிக்டாக் வீடியோவும் இந்த பெண் செய்து வந்துள்ளார்.

    இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 14,378ஆக உயர்வு.. பலி எண்ணிக்கை 480 ஆனது இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 14,378ஆக உயர்வு.. பலி எண்ணிக்கை 480 ஆனது

    English summary
    coronavirus: ariyalur tiktok girl discharged from corona ward who worked in chennai phoenix mall
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X