அரியலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திரும்ப திரும்ப பெரியாரையே வம்பிக்கிழுக்கும் எச். ராஜா.. ஏன் இப்படி.. எதற்காக இந்த வம்படி??

தந்தை பெரியார் குறித்து எச்.ராஜா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    திரும்ப திரும்ப பெரியாரையே வம்பிக்கிழுக்கும் எச்.ராஜா- வீடியோ

    அரியலூர்: தந்தை பெரியாரை எச்.ராஜா விடுவதாக இல்லை... திரும்பவும் வம்பிழுக்கு இழுத்து விட்டுள்ளார்!

    எப்பவுமே எதையாவது பேசி சர்ச்சையில் சிக்குவர் எச்.ராஜா. கொஞ்ச நாள் சத்தமே இல்லாமல் இருந்தவர் திரும்பவும் ஒரு பகீர் கருத்தை சொல்லி இருக்கிறார். தந்தை பெரியாரை தேச துரோகி' என்றும், அவரது சிலையை அகற்ற வேண்டும் என்றும் சொன்ன ராஜா, இப்போது, 'பெரியார், மணியம்மை குறித்த பாடங்களை பாடப்புத்தகங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூறி உள்ளார்.

    அரியலூரில் பிரகதீஸ்வரர் கோவிலுக்கு எச்.ராஜா நேற்று சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

    ராஜா சவால்

    ராஜா சவால்

    பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்கட்சிகள் யாராவது ஒருவரை பிரதமர் வேட்பாளர்களாக காட்ட முடியுமா? நான் சவால் விடறேன். மோடிதான் பலசாலி.. மக்கள் ஆதரவு உள்ள ஒரே தலைவர்.. சோனியாவும், ராகுல் காந்தியும் ஹரால்டு ஊழல் வழக்கில் ஜாமீனில் உள்ள குற்றவாளிகள். அவர்களுக்கு போதுமான வளர்ச்சி கிடையாது. எதிர்கட்சிகளால் ஒன்றும் செய்ய முடியாது. இவர்கள் பூஜியம் தான்.

    உதவாத துறை

    உதவாத துறை

    அதேபோல, இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலம், 22 ஆயிரத்து 600 வணிக வளாகம் உள்ளிட்டவைகள் மீட்கப்பட வேண்டும். இதனை பாதுகாக்க தவறிவிட்ட அறநிலைத்துறை வெளியேற வேண்டும். தமிழ்நாட்டிலேயே ஒன்றுக்கும் உதவாமல், தண்டத்திற்கு இருக்கும் ஒரே துறை இந்து அறநிலைத்துறைதான்.

    ஏன் தடுக்கவில்லை

    ஏன் தடுக்கவில்லை

    ஈ.வே.ரா, மணியம்மை பற்றி பாடத்திட்டத்தை பற்றி படித்த குழந்தைகள் ஒழுக்கமாக இருக்குமா? இந்த பாடத்திட்டதை புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும். பெரியார்-மணியம்மை குறித்த பாடங்களை படிக்கும் குழந்தைகள் எப்படி ஒழுக்கமாக வளரும். ஒரு வயதானவர் ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்வதை ஏன் தடுக்கவில்லை என்று குழந்தை கேட்டால் அதற்கு என்ன பதில் உள்ளது?

    கண்டனங்கள்

    கண்டனங்கள்

    எனவே பெரியார் குறித்த பாடங்களை புத்தகங்களில் இருந்து நீக்கினாலே எல்லாமே சரியாகிவிடும்" இவ்வாறு எச்.ராஜா கூறினார். திரும்பவும் பெரியாரை பற்றி எச்.ராஜா கூறிய இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

    English summary
    H.Raja again talk about EVR Periyar in Ariyalur
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X