• search
அரியலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

சுழன்றடிக்கும் 'சொர்ணலதா'.. 'அதிரும்' ஜெயங்கொண்டம்.. உச்சக்கட்ட 'பீதியில்' பாமக

Google Oneindia Tamil News

ஜெயங்கொண்டம்: மறைந்த வன்னியர் சமுதாய தலைவர் காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா ஜெயங்கொண்டம் தொகுதியில் எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார்.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், ஜெயங்கொண்டம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வழக்கறிஞர் பாலு போட்டியிடுகிறார். திமுகவில் கேஎஸ்கே கண்ணனும், அமமுகவில் சிவா, நாம்தமிழர் கட்சியில் நீலமகாலிங்கம் போட்டியிடுகிறார்கள்.

மக்கள் நீதிமய்யம் கூட்டணியில் ஐஜேகே கட்சியின் சார்பில் குருவின் மனைவி சொர்ணலதா களம் காண்கிறார்.

 காடுவெட்டி குரு

காடுவெட்டி குரு

வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள ஜெயங்கொண்டம் தொகுதியில், தலித்துகள் அடுத்த இடத்தில் உள்ளனர். மேலும், முதலியார் சமூகத்தினரும் கணிசமாக உள்ளனர். வன்னிய மக்களின் கோட்டை இந்த ஜெயங்கொண்டம். பா.ம.கவுக்கும் அ.தி.மு.கவுக்கு குறிப்பிடத்தகுந்த அளவில் இங்கு ஓட்டு வங்கி உள்ளது. கடந்த 2011ம் தேர்தலில் ,பாமகவின் மறைந்த காடுவெட்டி குரு இங்கு போட்டியிட்டு வென்றார். ஆனால், 2016 தேர்தலில் அதே பாமக வேட்பாளர் குருவை அ.தி.மு.க. வேட்பாளர் ராம ஜெயலிங்கம் தோற்கடித்தார். எனினும், ஜெயங்கொண்டம் தொகுதியில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது வன்னியர்கள் தான்.

 கலங்கும் பாமக

கலங்கும் பாமக

இந்நிலையில், மறைந்த காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா இங்கு ஐஜேகே சார்பில் போட்டியிடுவதால், பாமகவே கலங்கும் அளவுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. பாமகவுக்காக உழைத்த காடுவெட்டி குரு, உடல்நிலை நலிவுற்று மரணமடைய, அவருக்கு முறையான மேல் சிகிச்சை அளிக்கவில்லை என்ற கோபம், வன்னிய இளைஞர்கள் மத்தியில் ராமதாஸ் மீது ஏற்பட்டது. இதன் பிறகு, குருவின் மகன் கனலரசன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ராமதாஸுக்கு மேலும் பின்னடைவாக அமைந்தது.

 தேர்தலில் போட்டி

தேர்தலில் போட்டி

இந்த சூழலில் தான் தந்தையின் பெயரால் 'மாவீரன் மஞ்சள்படை' என்ற அமைப்பை உருவாக்கி, ஜெயங்கொண்டம் நகரத்தில் கொடியேற்றச் சென்ற கனலரசன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவங்களுக்கு பிறகு, வெகுண்டெழுந்த சொர்ணலதா, ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்துவை சந்தித்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்து, இப்போது ஜெயங்கொண்டம் தொகுதி வேட்பாளராக சுழன்று வருகிறார்.

 மிரண்ட கட்சிகள்

மிரண்ட கட்சிகள்

எந்த கட்சிக்காக காடுவெட்டி குரு உழைத்தாரோ, இன்று அதே கட்சிக்கு எதிராக அவரது மனைவி பம்பரமாய் சுழன்று வேலை செய்து வருகிறார். இதனால், தொகுதியில் அவரது செல்வாக்கு கணிசமாக உயர்ந்துள்ளதாக கள நிலவரம் தெரிவிக்கின்றன. இது பாமகவுக்கு தான் பெரும் சிக்கலாக அமைந்துள்ளது. குறிப்பாக, இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளராக, ஆயிரக்கணக்கான இளைஞர் படையுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுத் தாக்கல் செய்த சொர்ணலதாவை கண்டு, அனைத்துக் கட்சியினரும் அங்கு மிரண்டு போயுள்ளனராம்.

 ஐஜேகே நம்பிக்கை

ஐஜேகே நம்பிக்கை

சொர்ணலதாவின் வேட்பு மனுத் தாக்கலுக்கு நேரில் சென்ற ரவி பச்சமுத்து, தூய்மையான அரசியலை முன்னெடுத்து, இளைஞர்களை நல்வழிப்படுத்த, சொர்ணலதாவை வெற்றிப்பெறச் செய்யுங்கள் எனக் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி, எதிர்வரும் தேர்தலில் சொர்ணலதா நிச்சயம் தங்கள் கட்சியின் எம்.எல்.ஏ ஆவார் என்று ஐ.ஜே.கே. முழுமையாக நம்புகிறதாம். இதனால் அக்கட்சியின் டாப் மோஸ்ட் வேட்பாளராக வலம் வருகிறார் சொர்ணலதா

 வென்று காட்டுவாரா?

வென்று காட்டுவாரா?

எல்லாவற்றையும் விட, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்ததால், பாமகவின் செல்வாக்கு இந்த தேர்தலில் உயரும் என்று ஒருபக்கம் கருத்துக் கணிப்புகள் தெரிவித்து வரும் சூழலில், அந்த இட ஒதுக்கீடு அலையையும் வாரி சுருட்டி அடித்து செல்லும் அளவுக்கு சொர்ணலதா ஜெயங்கொண்டம் தொகுதியில் கடும் சவாலை உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. கணவர் இழந்த பதவியை வென்று காட்டுவாரா சொர்ணலதா? பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
IJK candidate sornalatha jayankondam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X