அரியலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தி தெரிந்தால்தான் கடன்.. திமிராக பேசிய ஜெயங்கொண்டம் வங்கி மேலாளர்.. அதிரடி இடமாற்றம்

Google Oneindia Tamil News

அரியலூர்: ஜெயங்கொண்டத்தில் இந்தி தெரியவில்லை என்பதால் லோன் தரமாட்டேன் என கூறி ஓய்வு பெற்ற மருத்துவரின் விண்ணப்பத்தை நிராகரித்த வங்கி மேலாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

மருத்துவத் துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். இவருக்கு ஜெயங்கொண்டம் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் நிறைய நிலங்கள், வீடுகள் உள்ளன.

தமிழ்நாட்டுக்கு வேலை பார்க்க வந்தவருக்கு இவ்வளவு ஆணவமா..? உணர்வுடன் விளையாட வேண்டாம் -மு.க.ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வேலை பார்க்க வந்தவருக்கு இவ்வளவு ஆணவமா..? உணர்வுடன் விளையாட வேண்டாம் -மு.க.ஸ்டாலின்

பேருந்து நிலையம்

பேருந்து நிலையம்

இந்த நிலையில் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்ட பாலசுப்பிரமணியன் முடிவு செய்தார். இதையடுத்து கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லோன் கேட்டு சென்றுள்ளார்.

ஆங்கிலம், தமிழ்

ஆங்கிலம், தமிழ்

இந்த வங்கியில் பாலசுப்பிரமணியன் கணக்கும் வைத்துள்ளார். வங்கியில் தற்போது மகாராஷ்டிராவை சேர்ந்த விஷால் நாராயண் காம்ப்ளே என்பவர் கிளை மேலாளராக இருந்து வருகிறார். அவரை சந்தித்த பாலசுப்பிரமணியன் இடம் தொடர்பான ஆவணங்கள், வரவு செலவு கணக்குகள், வருமான வரி செலுத்தும் படிவம் என அனைத்தையும் காண்பித்து லோன் வேண்டும் என ஆங்கிலம், தமிழில் பேசி கேட்டுள்ளார்.

இந்தி தெரியுமா

இந்தி தெரியுமா


அதற்கு காம்ப்ளேவோ, உங்களுக்கு இந்தி தெரியுமா என கேட்டார். மேலும் இந்தி தெரிந்தால்தான் லோன் கொடுக்க முடியும் என கூறிவிட்டார். மீண்டும் மீண்டும் மொழி பிரச்சினை குறித்தே அந்த மேலாளர் பேசியதாக பாலசுப்பிரமணியன் புகார் அளித்தார்.

இந்தி

இந்தி

இதுகுறித்து திருச்சி மண்டல அலுவலருக்கு புகார் சென்றது. அப்போது அவரை நேரில் அழைத்து பேசிய போது விஷால் காம்ப்ளேவுக்கு இந்தியை தவிர ஆங்கிலம் தெரியாது என தெரியவந்தது. இதையடுத்து விஷாலை இடமாற்றம் செய்து திருச்சி மண்டல அலுவலர் உத்தரவிட்டார்.

English summary
Jayamkondam Bank Manager gets transferred after he refused to give loan for the retired doctor who doesnt know Hindi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X