அரியலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காடுவெட்டி குரு மகன், மருமகனுக்கு அரிவாள் வெட்டு -மருத்துவமனையில் சிகிச்சை

Google Oneindia Tamil News

காடுவெட்டி: மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் நினைவிடம் அருகே அவரது மகன் மற்றும் மருமகன் ஆகியோர் மற்றொரு தரப்பால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதையடுத்து இருவரும் தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Recommended Video

    காடுவெட்டி குரு மகன், மருமகனுக்கு அரிவாள் வெட்டு

    காடுவெட்டி குருவின் 2-ம் ஆண்டு நினைவுநாள் நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது. காடுவெட்டியில் உள்ள குருவின் நினைவிடத்துக்கு மகன் கனலரசன், மருமகன் மனோஜ் ஆகியோர் சென்றிருந்தனர்.

    Kaduvetti Gurus son attacked by miscreants

    அப்போது கனல், மனோஜூக்கும் மற்றொரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கனலரசன், மனோஜ் ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டனர். இருவரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    Kaduvetti Gurus son attacked by miscreants

    இச்சம்பவம் குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் காடுவெட்டி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தந்தையின் சடலத்துடன் சுடுகாட்டுக்கு ஓடிய மகன்.. அங்கே காத்திருந்த பெரும் அதிர்ச்சி.. கொடுமை!!தந்தையின் சடலத்துடன் சுடுகாட்டுக்கு ஓடிய மகன்.. அங்கே காத்திருந்த பெரும் அதிர்ச்சி.. கொடுமை!!

    உரிய நடவடிக்கை எடுக்க த.வா.கா. வலியுறுத்தல்

    இச்சம்பவம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன். மற்றும் அவரது மருமகன் மனோஜ். மற்றும் அவரது சகோதரியின் மகன் மதன்.ஆகியோர் நேற்று இரவு காடுவெட்டி கிராமத்தில் கனலரசன் அவர்களின் அரசியல் எதிரிகளால் தலை,கை,கால், ஆகிய இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்து தற்போது தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது சகோதரி செந்தாமரை ஜெயராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்,இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்,மேலும் மேற்படி கொலை வெறித் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறை விரைந்து செயல்பட்டு அவர்களின் மீது உரிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்திட வேண்டுமென்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    English summary
    Former Vanniyar Sangam leader Kaduvetti Guru's son Kanalarasan was attacked by miscreants.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X