அரியலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நீங்க இருக்கவே கூடாது.. சொல்லி கொண்டே வெட்டினர்".. காடுவெட்டி குரு மகன் அதிர்ச்சி தகவல்

Google Oneindia Tamil News

அரியலூர்: "உங்களை யார் அரசியலுக்கு வர சொன்னது" என்று கேட்டுக் கொண்டே அரிவாளால் கனலை வெட்டினாங்க.. இதுக்கெல்லாம் காரணம் அன்புமணி ராமதாஸ்" என்று காடுவெட்டி குரு தரப்பில் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.. காடுவெட்டி குருவின் மகன், மருமகனை அரிவாளால் வெட்டிய சம்பவத்தை தொடர்ந்து போலீசார் இது சம்பந்தமான விசாரணையில் இறங்கி உள்ளனர்.

Recommended Video

    காடுவெட்டி குரு மகன், மருமகனுக்கு அரிவாள் வெட்டு

    டாக்டர் ராமதாசின் வலது கரமாகவும், வன்னியர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர் காடுவெட்டி குரு.. வட மாவட்டங்களில் மிகப்பெரிய கட்சியான பாமகவின் மிக முக்கியமான தலைவராக இருந்தவர்.தனது அதிரடியான பேச்சுகளால் வன்னிய இளைஞர்களை கட்டுக்குள் வைத்திருந்தவர் குரு.

    பாமக கூட்டங்கள் எங்கு நடந்தாலும் சரி, அந்த கூட்டங்களில் ராமதாஸ், அன்புமணி போன்றோர் பங்கேற்றிருந்தாலும் சரி, அவர்களின் பேச்சுகளைவிட குருவின் பேச்சுக்கு கைதட்டல்களும், ஆரவாரங்களும் பெருகும். அப்படிப்பட்டவர் உயிரிழந்தது பாமக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.

    காடுவெட்டி குரு மகன், மருமகனுக்கு அரிவாள் வெட்டு -மருத்துவமனையில் சிகிச்சை காடுவெட்டி குரு மகன், மருமகனுக்கு அரிவாள் வெட்டு -மருத்துவமனையில் சிகிச்சை

    பிரச்சனை

    பிரச்சனை

    இதற்கு பிறகு எத்தனையோ சலசலப்புகள், அதிருப்திகள் பாமக தரப்பில் குருவின் ஆதரவாளர்களுக்கு இருந்து வருகிறது.. அதேசமயம் குடும்ப பிரச்சனையும் குரு குடும்பத்தில் இருந்து வருகிறது. காடுவெட்டி குருவின் தந்தை ஜெயராமனின் சகோதரரின் மைத்துனர்தான் சின்னபிள்ளை. இந்த கிராமத்தில் உள்ள நாட்டாமைகளில் சின்னபிள்ளையும் முக்கியமானவர்.. குருவின் குடும்பத்திற்கும், சின்னபிள்ளை குடும்பத்திற்கும் சொத்து பிரச்சனை நீண்ட காலமாக உள்ளது... இதையொட்டி முன்பகையும் உள்ளது.

    காடுவெட்டி கிராமம்

    காடுவெட்டி கிராமம்

    இந்நிலையில், குருவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில்தான் குருவின் நினைவிடம் உள்ளது.. ஊரடங்கு அமலில் இருந்தபோதும் ஏராளமானோர் தனித்தனியாக வந்து அஞ்சலி செலுத்தினர்... அப்படித்தான் அருண்குமார் என்பவரும் பைக்கில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பவும் காடுவெட்டி கிராமத்தில் இருந்து சென்று கொண்டிருந்தார்.

    அரிவாள் வெட்டு

    அரிவாள் வெட்டு

    நள்ளிரவில் 12.30 மணி இருக்கும்.. அவரை 7 பேர் கும்பல் மறித்து, அரிவாளாலேயே வெட்டியது.. அவர்களிடம் இருந்து உயிர்பிழைத்த அருண்குமார், குருவின் மகன் கனலிடம் சென்று இதை பற்றி சொன்னார். உடனே கனலரசன், மருமகன் மனோஜ், மதன் ஆகிய 3 பேரும் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்றனர்... அவர்களையும் அந்த 7 பேரும் சேர்ந்து அரிவாளால் கனலை வெட்ட வந்தனர். அவர்மீது அரிவாள் வெட்டு விழாமல் இருப்பதற்காக மனோஜ் குறுக்கே வந்துவிட்டார்.. அதனால் அந்த வெட்டு அவரது தலையில் பலமாக விழுந்தது.. அவர் சரிந்து விழுந்ததும் அந்த கும்பல் கனலையும் அதே அரிவாளால் வெட்டியது.

    சிகிச்சை

    சிகிச்சை

    இதையடுத்து மனோஜ், கனல் இருவருமே ரத்த வெள்ளத்தில் விழுந்ததை பார்த்து உடனடியாக அங்கிருந்தோர் அவர்களை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கும், பிறகு மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சம்பந்தமாக மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.. மேலும் எந்தவித பதட்டமும் வந்துவிடக்கூடாது என்பதற்காக காடுவெட்டி கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டும் உள்ளனர்.

    கனலரசன்

    கனலரசன்

    மொத்தம் 3 பேர் நேற்றிரவு தாக்கப்பட்டுள்ளனர்.. மதன் என்பவர் குருவின் மருமகனான மனோஜின் அண்ணன் மகன் ஆவார்.. இந்த தாக்குதல் முழுக்க முழுக்க அரசியல் பின்னணி உடையதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாமக தரப்பு மீது கனலரசன் தரப்பில் புகார் தரப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை தந்து வருகிறது. குருவுக்கு நினைவுதினம் என்பதால் நிறைய கட்டுப்பாடுகள் ஏற்கனவே போலீசார் விதித்திருந்தனர்.. அதனால்தான் மகன் உட்பட வெறும் 4 பேருக்கு மட்டுமே அஞ்சலி செலுத்த அனுமதி தந்து, மற்றவர்களுக்கு தடையும் விதித்ததாக தெரிகிறது.

    யார் காரணம்?

    யார் காரணம்?

    குரு குடும்பத்தினர் யாரும் அரசியலுக்கு வந்துவிடக்கூடாது என்ற காழ்ப்புணர்ச்சி மாற்று தரப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது.. "இப்ப நீங்க அரசியலுக்கு வரணுமா?" என்று கேட்டுக் கொண்டே அரிவாளால் கனலரசனை வெட்ட வந்தார்களாம் என்றும் பாதிக்கப்பட்டோர் தரப்பில் கூறுகிறார்கள்.. எனினும் இரு தரப்பிலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.. அதேசமயம் வன்முறை எதுவும் நடந்துவிடாமலும் விழிப்புடன் கண்காணித்து வருகிறார்கள்.

    English summary
    kaduvetti guru son attack by his relatives near Jayankondam
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X