அரியலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரியலூர் அருகே சுண்ணாம்புக்கல் சுரங்கம் தோண்டும் பணிக்கு எதிர்ப்பு.. மக்கள் ஆர்ப்பாட்டம்

சுண்ணாம்புக்கல் சுரங்கம் தோண்டும் வேலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Google Oneindia Tamil News

அரியலூர்: அரியலூர் அருகே தங்கள் பகுதிக்குள் சாலைகளை ஆக்கிரமித்து சுண்ணாம்புக்கல் சுரங்கம் தோண்டி வருவதற்கு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி எதிர்ப்பு தெரிவித்தனர்.

செந்துறை அடுத்த சோழன்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு ஒரு தனியார் நிறுவனம் சுண்ணாம்புக்கல் சுரங்கம் தோண்டும் வேலையில் இறங்கி உள்ளது. இதற்காக பொதுமக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வரும் சாலையையும் அந்த நிறுவனம் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது.

Public demonstration against Lime mining near Ariyalur

இதனை கண்டித்து சோழன்பட்டி, தாமரைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமூக ஆர்வலர் அருள்மொழிவர்மன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம மக்கள் மண்டை ஓடு படங்களுடன் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், "எங்களின் சாலையை பஞ்சாயத்து தீர்மானத்தை மீறி ஆக்கிரமிக்காதே, சுரங்கத்தில் வெடிவைத்து கர்ப்பிணி சிசுவை அழிக்காதே, ஊர் முழுவதும் புழுதியை கிளப்பி நுரையீரல் தொற்றை ஏற்படுத்தாதே என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

பிடித்தவருடன் வாழலாம் கோர்ட்டே சொல்லிருக்குனு சொன்ன மனைவி... கல்லைப் போட்டுக் கொன்ற கணவன்! பிடித்தவருடன் வாழலாம் கோர்ட்டே சொல்லிருக்குனு சொன்ன மனைவி... கல்லைப் போட்டுக் கொன்ற கணவன்!

English summary
Public demonstration against Lime mining near Ariyalur
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X