அரியலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்று பாஜக தலைமை முடிவு செய்யும் - எல். முருகன் புது குண்டு

முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் பாஜகதான் அதனை அறிவிக்கும். தேர்தலை யாருடைய தலைமையில் சந்திப்பது என்பதையும் தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

அரியலூர்: சட்டசபைத் தேர்தலில் யார் தலைமையில் போட்டியிடுவது என்றும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜகவின் தேசிய தலைமைதான் முடிவு செய்து அறிவிக்கும் என்றும் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

Recommended Video

    அரியலூர்: முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை முடிவு செய்யும்.. குண்டை தூக்கி போட்ட எல்.முருகன்..!

    தமிழக சட்டசபைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் தேர்தல் பிரச்சாரத்தை அரம்பித்து விட்டன. திமுக முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

    The BJP leadership will decide who will be the chief ministerial candidate in Tamil Nadu. L. Murugan

    அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார். பழனிச்சாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து இன்றைய தினம் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார்.

    லோக்சபா தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சியினர் இணைந்து தேர்தலை சந்தித்தனர். கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்த போது, லோக்சபா தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி, சட்டசபைத் தேர்தலிலும் தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் அறிவித்தனர்.

    அதிமுக பாஜக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் அரியலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், "தற்போதைய கூட்டணி தொடரும். ஆனால் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தேசிய தலைமை முடிவு எடுக்கும் என்று கூறியுள்ளார்.

    அரிசி அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ. 2500 பொங்கல் பரிசு - முதல்வர் அறிவிப்பு அரிசி அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ. 2500 பொங்கல் பரிசு - முதல்வர் அறிவிப்பு

    முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் பாஜகதான் அதனை அறிவிக்கும். தேர்தலை யாருடைய தலைமையில் சந்திப்பது என்பதையும் தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார். கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் முதல்வர் வேட்பாளர் பற்றி பாஜக மாநில தலைவர் எல். முருகன் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    BJP's state president L Murugan has said that the BJP's national leadership will decide who will contest the assembly elections and who will be the chief ministerial candidate.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X