அரியலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2019ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு அரியலூரில் தொடங்கியது... பார்வையாளர்கள் ஆரவாரம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Neikkarapatti jallikattu | நெய்காரபட்டி ஜல்லிக்கட்டு..சீறிப்பாய்ந்த 700க்கும் மேற்பட்ட காளைகள்

    அரியலூர்: 2019- ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு அரியலூர் மாவட்டத்தில் தொடங்கி உள்ளது. ஏராளமானோர் ஆரவாரம் செய்து ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்து வருகின்றனர்.

    அரியலூர் மாவட்டம் மலத்தான்குளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.

    The First Jallikattu began in Ariyalur in 2019

    அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அலங்கரிக்கப்பட்ட 500 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

    வாடிவாசலிலிருந்து சீறிபாய்ந்து வந்த காளைகளை, காளையர்கள் அடக்க முயன்றனர். பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு வெள்ளிகாசுகள், கட்டில், சைக்கிள், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. காளைகளை அடக்கிய வீரர்கள் மீது பரிசு மழை பொழிந்தன.

    இதற்கிடையே, பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 15ம் தேதியும், பாலமேட்டில் ஜனவரி 16ம் தேதியும், அலங்காநல்லூரில் 17ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The first Jallikattu of the year 2019 in Ariyalur district . Many people cheer up and look at the Jallikattu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X