அரியலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராமதாஸுக்கு அரசியல் தெரியாது.. அவரையே நான்தான் அறிமுகம் செய்தேன்.. திருமாவளவன் அதிரடி

டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டிற்கு திருமாவளவன் பதிலடி தந்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    திருமாவளவனை தாக்கிய ராமதாஸ் -வீடியோ

    அரியலூர்: சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் குறித்து ராமதாஸ் கொளுத்தி போட்ட தீ இன்று கனன்று ஜிகுஜிகுவென எரிந்து வருகிறது!

    2 தினங்களுக்கு முன்பு பாமக நிறுவனர் டாக்டர் சிதம்பரம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். நேரடி எதிர்க்கட்சியான திமுகவை விட்டுவிட்டு, கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை பற்றி விலாவரியாக குற்றஞ்சாட்டினார்.

    இதற்கு காரணம், அந்த தொகுதியில் திருமாவளவன்தான் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் பாமக வலிமை பொருந்தி இருந்தாலும், என்ன காரணத்தினாலோ இந்த முறை சிதம்பரம் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்படவில்லை.

    ரேபரேலி என்ன? வாரணாசியில் போட்டியிடட்டுமா? தொண்டர்களிடம் ஷாக் கேள்வி கேட்ட பிரியங்கா காந்தி! ரேபரேலி என்ன? வாரணாசியில் போட்டியிடட்டுமா? தொண்டர்களிடம் ஷாக் கேள்வி கேட்ட பிரியங்கா காந்தி!

    என் தப்புதான்

    என் தப்புதான்

    அப்போது ராமதாஸ் பேசியபோது, "தமிழ் சமூக சீர்திருத்தத்திற்காக அரசியலில் திருமாவளவனை அறிமுகம் செய்து வைத்ததே நான்தான்.. ஆனா அது என் தப்புதான். அவரது கட்சி வன்முறை, கட்ட பஞ்சாயத்து கட்சியாக உள்ளது. என்னை கேட்டால் இப்படி ஒரு கட்சியே எதுக்கு? வேண்டாம் என்றுதான் சொல்வேன்" என்று தெரிவித்திருந்தார்.

    டாக்டர் ராமதாஸ்

    டாக்டர் ராமதாஸ்

    இந்நிலையில், டாக்டர் ராமதாஸை அறிமுகம் செய்ததே நான் தான் என்று திருமாவளவன் திருப்பி போட்டு தாக்கி உள்ளார். இது தொடர்பாக அரியலூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது:

    அவதூறுகள்

    அவதூறுகள்

    திமுக கூட்டணிக்கு கிடைத்திருக்கும் ஆதரவை பார்த்துதான் அதை தாங்கி கொள்ள முடியாமல், அதை திசைதிருப்பவே எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்பி வருகிறார்கள். பணத்தை இந்த தேர்தலில் அதிமுக கொட்டுகிறார்கள். அதிமுக கூட்டணி பாவத்தை சுமக்கும் கூட்டணி. எதிர் கூட்டணியின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

    அறிமுகம்

    அறிமுகம்

    ராமதாஸ் அரசியலை சொல்லி தரமாட்டார். என்னை அறிமுகம் செய்து வைத்ததாக ராமதாஸ் கூறுகிறார். அவரை நான்தான் மேலூரில் அறிமுகம் செய்து வைத்தேன். இட ஒதுக்கீடு போராட்டத்தில் இறந்தவர்களை ராமதாஸ் இதுவரை சென்று பார்க்கக்கூட இல்லை. கருணாநிதிதான் அவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கி பென்சன் கிடைக்க நடவடிக்கை எடுத்தார்" என்றார்.

    இப்போ நமக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. யார் யாரைதான் அரசியலில் அறிமுகப்படுத்தி இருப்பார்கள்?

    English summary
    VCK Thirumavalavan says, "I introduced Dr Ramadoss. He does not know politics "
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X