அரியலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரியலூரில் சிறுத்தைகள் ஹேப்பி.. திருமா.வின் தம்பி மனைவி அமோக வெற்றி.. தொண்டர்கள் உற்சாகம்!

திருமாவளவனின் தம்பி மனைவி வெற்றி பெற்றார்

Google Oneindia Tamil News

சென்னை: தொல், திருமாவளவனின் கொளுந்தியார் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.. செந்துறையில் போட்டியிட்ட திருமாவின் தம்பி மனைவி அமோக வெற்றி பெற்றுள்ளதால் விசிகவினர் பெரும் சந்தோஷத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெற்றது. இதில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், செந்துறை மற்றும் திருமானூர் ஒன்றியத்துக்கு கடந்த.27-ம் தேதியும், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஒன்றியத்துக்கு 30-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

thirumavalavans sister in law wins in ariyalur

திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சிக்கு அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியம், சன்னாசிநல்லூர் வார்டு எண்-1 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட்டது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் தம்பி மனைவி செல்வி செங்குட்டுவன் போட்டியிட்டார்.

படுதோல்வியடைந்த அன்வர் ராஜா மகள்... டெபாசிட் இழந்த பரிதாபம் படுதோல்வியடைந்த அன்வர் ராஜா மகள்... டெபாசிட் இழந்த பரிதாபம்

குலையுடன் கூடிய தென்னைமரம் சின்னத்தில் இவர் களம் கண்டதுமே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இங்குள்ள சன்னாசிநல்லூர்தான் திருமாவளவன் சொந்த ஊர்.. இன்று வாக்கு எண்ணப்படும்போது, ஆரம்பத்தில் இருந்தே செல்வி முன்னிலையிலேயே இருந்தார்.. இறுதியில் 2,446 வாக்குகள் பெற்று செல்வி வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 1,084 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தார்.. அதாவது, 1,362 வாக்குகள் கூடுதலாக செல்வி பெற்றுள்ளார்.. இந்த வெற்றியானது விசிக தொண்டர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

English summary
vck leader thirumavalavans sister in law wins in senthurai in ariyalur district
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X