அரியலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"எந்த பட்டனை அமுக்கினாலும் இரட்டை இலைக்கு விழுவதாக தகவல்கள் வருது".. திருமா புகார்

தேர்தல் அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தல் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் : திருமா குற்றச்சாட்டு- வீடியோ

    செந்துறை: "எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு வாக்கு வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வருகின்றன" என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    VCK Thirumavalavan vote for Anganur in Ariyalur District

    மனைவியுடன் ஓட்டு போட்ட விஜயகாந்த்.. பூத்துக்ள் நுழைந்ததும் கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு கெத்து! மனைவியுடன் ஓட்டு போட்ட விஜயகாந்த்.. பூத்துக்ள் நுழைந்ததும் கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு கெத்து!

    இவருடைய சொந்த கிராமம் அரியலூர் மாவட்டம் அங்கனூர் ஆகும். இன்று வாக்கு பதிவு என்பதால், இந்த கிராமத்திற்கு வந்துள்ளார்.

    அந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்தான் இவருக்கு ஓட்டு! அதனால் தன்னுடைய தாயார் பெரியம்மாவுடன் பூத்துக்கு வந்து வரிசையில் நின்று கொண்டார். பிறகு தன்னுடைய வாக்கை செலுத்திவிட்டு வெளியே வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார்.

    அப்போது, "தேர்தல் இப்போது அமைதியாக நடைபெற்று வருகிறது. ஆனால் ஒரு சில இடங்களில் எந்திரங்கள் பழுதாகி இருக்கின்றன. சில இடங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு வாக்கு வருவதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வருகின்றன.

    இதுவரைக்கும் தேர்தல் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாகதான் செயல்பட்டு வந்தார்கள். இன்னைக்கு ஒருநாளாவது நேர்மையாக பணியாற்றி வாக்குப் பதிவை முடிக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

    English summary
    VCK Leader Thirumavalavan casts his vote in Anganur and asked the authorities to act neutrally.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X