
நாட்டில் நிலைமை சரியில்லை.. நீங்கள் பயப்பட வேண்டாம்.. ரம்ஜான் தொழுகையில் மம்தா பானர்ஜி பரபர பேச்சு
கொல்கத்தா: ‛‛இந்தியாவில் தற்போது நிலைமை சரியானதாக இல்லை. நீங்கள் பயப்பட வேண்டாம். போராட வேண்டும். சமாதானம் பற்றி பேசி ஒன்றிணைந்து போராட வேண்டும். நல்லநாள் விரைவில் வரும்'' என கொல்கத்தாவில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் பங்கேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.
இஸ்லாமிய மக்கள் ரமலான் மாதத்தில் நோன்பு மேற்கொள்வர். இந்த மாதத்தில் நாள் முழுவதும் பின்னிரவில் உணவருந்தி சூரியன் மறைவு வரை நோன்பு இருப்பர்.
பிறை தெரிந்ததை தொடர்ந்து இன்று நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அமித் ஷா கேட்ட கேள்வி! அவ்ளோதான்.. அடுத்தடுத்த ஆக்சனில் குதித்த அண்ணாமலை.. டெல்லி தந்த ப்ரீ ஹேண்ட்!

இன்று ரம்ஜான் கொண்டாட்டம்
ரம்ஜானையொட்டி இன்று காலை பெருநாள் சிறப்பு தொழுமை தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்தது. மசூதிகள் மற்றும் பொது இடங்களில் முஸ்லிம் மக்கள் திரண்டு புத்தாடைகள் அணிந்து தொழுகையில் பங்கேற்றனர். பிறகு அனைவரையும் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்து கூறி கொண்டனர்.

வாழ்த்துகள்
ரம்ஜானையொட்டி அரசியல் கட்சி தலைலவர்கள், முஸ்லிம்கள் அல்லாத பிற மத தலைவர்கள், நண்பர்கள் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய , மாநில அமைச்சர்கள் ரம்ஜான் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

மம்தா பானர்ஜி பங்கேற்பு
இந்நிலையில் ரம்ஜானையொட்டி மேற்கு வங்க மாநிலத்தில் அரசு சார்பில் சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்இ கொடுக்கப்பட்டு இருந்தனர். மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் ரெட் ரோடு பகுதியில் இன்று நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அவர் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தார். அதன்பிறகு அவர் பேசியபோது கூறியதாவது:

நாட்டின் நிலைமை சரியானதாக இல்லை
‛‛இந்நிய நாட்டில் தற்போது நிலைமை சரியானதாக இல்லை. நீங்கள் பயப்பட வேண்டாம். போராட வேண்டும். சமாதானம் பற்றி பேசி ஒன்றிணைந்து போராட வேண்டும். நல்லநாள் விரைவில் வரும். மேற்கு வங்காளத்தில் அனைத்து மக்களிடையேவும் மிக உயர்ந்த ஒற்றுமை உள்ளது. நாம் கோழைகள் அல்ல. நமக்கு போராட தெரியும். நாட்டில் பிரித்தாளும் கொள்கையை மையப்படுத்தி தனிமைப்படுத்தும் நோக்கிலான அரசியல் நடக்கிறது. இது நாட்டுக்கு நல்லது இல்லை'' என முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாகவும், மத்திய அரசை விமர்சனம் செய்தும் பேசினார்.

டுவிட்டரில் வாழ்த்து
முன்னதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதில், ‛ அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகள். மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியம் கிடைக்க வேண்டும். நமது ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பிணைப்புகள் வலுப்பெற பிரார்த்தனை செய்யுங்கள்'' என குறிப்பிட்டு இருந்தார்.