பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அபார்ட்மெண்ட்டில் நடந்த மெகா விருந்து... மொத்தமாக தூக்கிய கொரோனா... 103 பேருக்கு பாஸிட்டிவ்!

Google Oneindia Tamil News

பெங்களூரு: பெங்களுருவில் பொம்மனஹல்லி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் 103 பேருக்கு கொரோனா தொற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிப்ரவரி 4-ம் தேதி அந்த குடியிருப்பில் மெகா விருந்து நடந்துள்ளது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த விருந்துதான் கொரோனா அனைவருக்கும் பரவ முக்கிய காரணமாக இருந்துள்ளது.

103 test positive for corona virus in Bengaluru apartment

இந்தியாவில் கொரோனா ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனாலும் கேரளா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. கர்நாடகாவில் ஓரளவு கொரோனா கட்டுக்குள் உள்ளது. ஆனால் தற்போது அங்கு ஒரே இடத்தில் மொத்தமாக பாதிப்பு ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் படிக்கும் 40 மாணவிகளுக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று கண்டறியப்பட்டப்பட்டது. சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பெங்களுருவில் பொம்மனஹல்லி பகுதியில் உள்ள எஸ்.என்.என் லேக் வியூ குடியிருப்பில் வசிக்கும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியை அதிகரித்து உள்ளது. அந்த குடியிருப்பை சேர்ந்த சிலர் டேராடூனுக்கு பயணம் செய்வதற்கு முன்பு சோதனை செய்தபோது கொரோனா பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

பிப்ரவரி 4-ம் தேதி அந்த குடியிருப்பில் மெகா விருந்து நடந்துள்ளது. இதில் அந்த குடியிருப்பில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். விருந்துதான் கொரோனா அனைவருக்கும் பரவ முக்கிய காரணமாக இருந்ததாக பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் புதிதாக 9,121 பேருக்கு கொரோனா... கேரளாவில் பாதிப்பு தொடர்ந்து உச்சம்! நாடு முழுவதும் புதிதாக 9,121 பேருக்கு கொரோனா... கேரளாவில் பாதிப்பு தொடர்ந்து உச்சம்!

இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சின் ஆணையர் மஞ்சுநாத் பிரசாத் கூறுகையில், இந்த குடியிருப்பில் 1,052 பேரை சோதனை செய்துள்ளோம். அதில் 103 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதியானவர்களில் 96 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். அங்கு தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். வைரஸின் மாறுபாட்டைக் கண்டறிய மாதிரியை சோதனைக்கு அனுப்பி உள்ளோம் என்றார்.

English summary
A corona infection has been confirmed in 103 people in an apartment in the Pommanahalli area of Bangalore, causing shock
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X