பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடேங்கப்பா.. கொரோனா தடுப்பூசி போடுவதில் ஹை ஸ்பீட் கர்நாடகா - தமிழகம் நிலை என்ன?

Google Oneindia Tamil News

கர்நாடகா: இந்தியாவில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி அதிகம் செலுத்தியதில் கர்நாடகா முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றுக்கான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் கடந்த 16-ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

16 lakh covid vaccination Karnataka tops with 1.9 lakh

இதில், நேற்று (ஜன.24) ஞாயிற்றுக்கிழமை வரை மொத்தமாக 16 லட்சத்து 13 ஆயிரத்து 667 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் அதிகபட்சமாக 1.9 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, ஒடிசாவில் 1.5 லட்சம், ஆந்திராவில் 1.4 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று (ஞாயிறு) இந்தியாவில் ஹரியானா, கர்நாடகா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களில் மட்டும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தமிழகத்தில் இதுவரை 61 ஆயிரத்து 720 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Covid vaccinated list, karnataka top in list - How it is?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X