பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இவரெல்லாம் ஒரு மகனா?...புள்ளய பெத்தா கண்ணீர்தானா?.. 10 மாதம் சுமந்த தாய்க்கு செய்யும் காரியமா இது

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் பெற்ற தாயை துடைப்பம் கொண்டு மகன் ஒருவன் அடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து போலீஸார் தாங்களாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெங்களூரில் 53 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது மகன் சரியாக படிப்பதில்லை என்றும் அவரது எதிர்காலம் குறித்து பயப்படாமல் இருப்பதாகவும் பக்கத்து வீட்டில் வசிப்பவரிடம் கூறியுள்ளார். இது குறித்து அவரது 17 வயது மகனுக்கு தெரிந்துவிட்டது.

17 years old boy beats his mom with broom in Bangalore

இதனால் ஆத்திரமடைந்த அந்த மகன், தனது தாயை துடைப்பதால் அடித்து துன்புறுத்தினார். அந்த தாயோ அடிக்காதே என அழுது கொண்டே கெஞ்சினார். இதையடுத்து சிறுவனின் அக்காள் தடுத்தார். ஆனால் எனினும் அவர் கேட்காமல் தாய் போலீஸில் புகார் அளித்தாலும் தனக்கு கவலையில்லை என்றார்.

அதற்கு அந்த சகோதரியோ நீ போலீஸ் புகார் குறித்தெல்லாம் கவலைப்பட மாட்டாய் என்பது தெரியும். உன்னை என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறேன் என்று கூறிவிட்டுதாயை தாக்கியதை வீடியோவாக எடுத்து அவரது அக்கா சமூகவலைதளங்களில் பரவவிட்டார்.

பெற்றத் தாயை மகன் துடைப்பத்தால் அடிக்கும் வீடியோவை நேற்று சமூக வலைதளங்களில் பார்த்த பலர் அந்த மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து காவல் துறையினர் அந்த சிறுவனை காவல் நிலையத்துக்கு வரவழைத்து எச்சரிக்கை செய்தனர்.

இதையடுத்து இனி இது போல் செய்ய மாட்டேன் என போலீஸாரிடம் வாக்குறுதி அளித்தார். இதையடுத்து அவரை போலீஸார் விடுவித்தனர். மகன் துடைப்பத்தால் அடித்த போது அந்த தாய் வலி தாளமுடியாமல் கத்திய காட்சி அனைவரையும் உலுக்கியது.

English summary
Police registered a suo motu case against a 17-year old boy after a video of him beating his mother with a broom went viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X