பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நேருக்கு நேர் மோதிய இந்திய ஏர்போர்ஸ் விமானங்கள்.. பெங்களூரில் பரபரப்பு.. ஒருவர் பலி!

பெங்களூரில் இந்திய விமானப்படை விமானங்கள் 2 நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நேருக்கு நேர் மோதிய இந்திய ஏர்போர்ஸ் விமானங்கள்-வீடியோ

    பெங்களூர்: பெங்களூரில் இந்திய விமானப்படை விமானங்கள் 2 நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானி ஒருவர் பலியாகி உள்ளார்.

    கடந்த பிப்ரவரி 1ம் தேதி பெங்களூரில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் இந்திய விமானப்படை விமானம் விபத்திற்கு உள்ளானது. மிராஜ் -2000 ரக விமானம் சரியாக புறப்படும் நேரத்த்தில் டேக் ஆப் செய்யும் போது விபத்து ஏற்பட்டது.

    2 aircraft of the Surya Kiran Aerobatics Team crash at an airbase in Bengaluru

    இதில் விமானிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தற்போது அதேபோலதொரு விமான விபத்து பெங்களூரின் எலஹாங்காவில் நடந்து உள்ளது. பெங்களூரில் இன்னும் சில நாட்களில் ஏரோஇந்தியா 2019 விமான சாகச கண்காட்சி நடக்க உள்ளது.

    2 aircraft of the Surya Kiran Aerobatics Team crash at an airbase in Bengaluru

    இந்த விமான கண்காட்சிக்காக சாகச பயிற்சியில் ஈடுப்பட்டு இருந்த போதுதான் இந்த விபத்து நிகழ்ந்து உள்ளது. இந்திய விமானப்படை விமானங்கள் 2 நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

    விபத்துக்கு உள்ளான இரண்டு விமானங்களும் சூர்ய கிரண் பிரிவை சேர்ந்த விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.

    இந்த விபத்தில் விமானி ஒருவர் பலியாகி உள்ளார். மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி பலியானார். தற்போது 2 விமானிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விமானிகள் இருவரும் சரியான நேரத்தில் அவசர கால பாராசூட் மூலம் தப்பித்ததாக கூறப்படுகிறது.

    English summary
    Two aircraft of the Surya Kiran Aerobatics Team crash at the Yelahanka airbase in Bengaluru.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X