பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொடுமை.. கொடுமையோ கொடுமை.. குமாரசாமி கட்சி வேட்பாளர்கள் செய்த வேலையை பாருங்க

Google Oneindia Tamil News

Recommended Video

    JDS may support bjp | எடியூரப்பா அரசுக்கு ஆதரவு அளிக்க குமாரசாமி கட்சி தயார்

    பெங்களூர்: கர்நாடக அரசியலில் ஒரு பெரும் பரபரப்பு நிகழ்வு ஏற்பட்டுள்ளது. வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளில், ஒரு முக்கிய கட்சியின் 2 வேட்பாளர்கள் திடீரென தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.

    224 தொகுதிகளை கொண்ட, கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையில், 105 தொகுதிகளை வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது.

    எனவே ஆளுநர் அந்த கட்சியை ஆட்சியமைக்க அழைத்தார். இருப்பினும், எடியூரப்பாவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    7 லட்சியம்.. ஆனால், 6 ஓகேதான்.. எப்படி ஒரு பாருங்க எடியூரப்பாவுக்கு!7 லட்சியம்.. ஆனால், 6 ஓகேதான்.. எப்படி ஒரு பாருங்க எடியூரப்பாவுக்கு!

    குமாரசாமி ஆட்சி

    குமாரசாமி ஆட்சி

    இதையடுத்து, காங்கிரஸ்-மஜத கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. குமாரசாமி முதல்வரானார். ஆனால், எப்படியாவது ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தில், எடியூரப்பா அன்ட் கோ, தீவிரம் காட்டியது. இந்த நிலையில்தான், காங்கிரசை சேர்ந்த 14 எம்எல்ஏக்கள் மற்றும் மஜதவை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி அரசு கலைந்தது.

    இடைத் தேர்தலில் போட்டி

    இடைத் தேர்தலில் போட்டி

    இதையடுத்து, 17 பேரையும் தகுதி நீக்கம் செய்தார் அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார். எடியூரப்பா தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. தகுதி நீக்கப்பட்ட 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தகுதி நீக்கம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், வரும் டிசம்பர் 5ம் தேதி நடைபெற உள்ள 15 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில் இவர்கள் போட்டியிட தடையில்லை என்றும் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.

    மும்முனை போட்டி

    மும்முனை போட்டி

    இதனால், பாஜக, காங்கிரஸ், மஜத என கர்நாடகாவில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், அதானி தொகுதியில் மஜத சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த, குரு தஷ்யால் மற்றும் ஹிரேகேரூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த சிவலிங்க சிவாச்சாரியா சுவாமி ஆகிய இருவரும் வேட்புமனுக்களை நேற்றைய தினம் வாபஸ் பெற்றுள்ளனர்.

    வேட்புமனுக்கள்

    வேட்புமனுக்கள்

    பாஜக தலைவர்கள் கொடுத்த தொடர் அழுத்தம் மற்றும் பேச்சுவார்த்தையால், இவர்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளதாக மஜத தலைமை குற்றம்சாட்டியுள்ளது. இதனிடையே, கோகாக் தொகுதியில், பாஜக அதிருப்தியாளரான அசோக் பூஜாரிக்கு, மஜத போட்டியிட வாய்ப்பு வழங்கியது. அவரிடம், போட்டியிலிருந்து விலக பாஜக வலியுறுத்தியதாக தெரிகிறது. இருப்பினும் இந்த கோரிக்கையை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

    பாஜக அதிருப்தி

    பாஜக அதிருப்தி

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிற கட்சி எம்எல்ஏக்களுக்கு, பாஜக போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளதை, அந்தந்த தொகுதியிலுள்ள பாஜக நிர்வாகிகள் விரும்பவில்லை. இதனால், அதிருப்தியாளர்கள் வேறு கட்சி சார்பிலோ அல்லது, சுயேச்சையாகவோ பாஜகவை எதிர்த்து களம் காண்கிறார்கள். இவ்வாறு போட்டியிடுவோர் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற பாஜக தலைமை கோரிக்கைவிடுத்தது. இதை பலரும் ஏற்கவில்லை. அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

    12 பேர்தான்

    12 பேர்தான்

    15 தொகுதிகளில் 12 இடங்களில் மட்டுமே மஜதவுக்கு வேட்பாளர்கள் உள்ளனர். இருவர் வாபஸ் பெற்ற நிலையில், ஹொசகோட்டை தொகுதியில், மஜத யாரையும் நிறுத்தவில்லை. அதற்கு பதில், பாஜக அதிருப்தியாளரும், சுயேச்சை வேட்பாளராக களம் காண்பவருமான, சரத் பச்சேகவுடாவை ஆதரிக்கிறது. ஆக மொத்தம், 15 தொகுதிகளில், சுயேச்சைகள் உட்பட, 218 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அதில், 53 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.

    English summary
    On the last date for the withdrawal of nominations to contest the upcoming by-elections in Karnataka, two Janata Dal (Secular) (JDS) candidates withdrew their names.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X