பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

4 வாரம் முன் நடந்த மாடல் கொலை.. சிசிடிவியை வைத்து பிடித்த போலீஸ்.. கேப் ஓட்டுநரின் ஷாக் வாக்குமூலம்

கொல்கத்தாவை சேர்ந்த மாடல் ஒருவர் பெங்களூரில் கேப் ஓட்டுனரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

பெங்களூர்: கொல்கத்தாவை சேர்ந்த மாடல் ஒருவர் பெங்களூரில் கேப் ஓட்டுனரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூர் நகரத்தில் இருந்து பெங்களூர் கேம்பேகவுடா விமான நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி பெண்ணின் உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பகுதியில் வசிக்கும் விவசாயி மக்கள் அதிகாலையில் பெண்ணின் உடலை பார்த்து போலீசுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீஸ் அந்த பெண்ணின் உடலை மருத்துவமனைக்கு எடுத்து சென்று பிரேத பரிசோதனை செய்தனர். ஆனால் அந்த பெண்ணின் உடல் குறித்த வேறு எந்த விவரமும் போலீசாருக்கு தெரியவில்லை.

என்ன விசாரணை

என்ன விசாரணை

முதலில் அந்த பெண்ணின் உடல் குறித்த விவரம் தெரியாமல் போலீசார் குழம்பி வந்தனர். அதன்பின் போலீசாருக்கு வந்த புகாரின் அடிப்படையில் அந்த பெண் கொல்கத்தாவை சேர்ந்த மாடல் என்பதும் அவரின் பெயர் பூஜா சிங் டே என்பதும் தெரிய வந்தது. அவர் பெங்களூர் வந்துவிட்டு கடந்த ஜூலை 31ம் தேதி பெங்களூரில் இருந்து கொல்கத்தாவிற்கு விமான டிக்கெட் புக் செய்துள்ளார்.

வருமான வரியை ஒழிக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமனுக்கு ஐடியா தரும் சுப்பிரமணியன் சுவாமி!வருமான வரியை ஒழிக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமனுக்கு ஐடியா தரும் சுப்பிரமணியன் சுவாமி!

துப்பு கிடைத்தது

துப்பு கிடைத்தது

அதன்பின் ஜூலை 30ம் தேதி நள்ளிரவில் பெங்களூர் குமார் பார்க் ஹோட்டலில் இருந்து ஓலா கேப் புக் செய்து பெங்களூர் விமான நிலையம் நோக்கி சென்றுள்ளார். அதன்பின்தான் அந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த துப்பை வைத்து போலீசார் தீவிரமாக அந்த கேப் ஓட்டுனரை சந்தேகித்து அவரை தேட தொடங்கினார்கள்.

ஆதாரங்கள்

ஆதாரங்கள்

அதன்படி அந்த பெண் ஹோட்டல் வாசலில் கேப் ஏறியது, போகும் வழியில் கேப் ரூட் மாறியது எல்லாம் சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கேப் ஓட்டுநர்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று உறுதி செய்தனர். இதன் அடிப்படையில் ஓலா கேப் ஓட்டுநர் எம் எம் மகேஷ் என்ற இளைஞர் போலீசால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு, பின் கைது செய்யப்பட்டார். போலீசார் விசாரித்ததில் அந்த பெண்ணை தான்தான் கொலை செய்தேன் என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஏர்போர்ட்

ஏர்போர்ட்

முதலில் பூஜா சிங் பெங்களூர் கேம்பேகவுடா விமான நிலையத்திற்கு கேப் புக் செய்துள்ளார். அது நீண்ட தூரம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை என்பதை பயன்படுத்திக் கொண்ட கேப் ஓட்டுநர் எம் எம் மகேஷ் வண்டியை வேறு சாலைக்கு கொண்டு சென்று நிறுத்திவிட்டு அந்த பெண்ணை மிரட்டி உள்ளார். அந்த பெண்ணிடம் உள்ள நகை பணம் அனைத்தையும் கேட்டுள்ளார்.

மறுத்தார்

மறுத்தார்

ஆனால் பூஜா சிங் தனது பணத்தை கொடுக்க மறுக்கவே காரில் இருந்த இரும்பு கம்பியால் தாக்கி அந்த பெண்ணை கொலை செய்துள்ளார். அதன்பின் அந்த பெண்ணின் போன் மூலம் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு, பெண்ணின் கணவருக்கு மெசேஜ் செய்துள்ளார். பின் அந்த பெண்ணின் போனை எடுத்துவிட்டு, நகை பணத்தை எடுத்துவிட்டு அவரின் உடலை புதைத்துள்ளார்.

மீண்டும் மீண்டும் தாக்கி கொலை

மீண்டும் மீண்டும் தாக்கி கொலை

முதலில் அந்த பெண்ணை தாக்கிய போது அவர் சரியாக காயம் அடையவில்லை. இதனால் மீண்டும் பல முறை கொடூரமாக தாக்கி அந்த பெண்ணை கொலை செய்துள்ளார். பின் உடலை அவசர அவசரமாக அரைகுறையாக உடலை புதைத்துவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார். போலீசார் விசாரணையில் இந்த திடுக்கிடும் கொலை குறித்து கேப் ஓட்டுநர் எம் எம் மகேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பாக தற்போது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பெங்களூரை உலுக்கி உள்ளது.

English summary
Shocking: 22-year-old Ola cab driver arrested for murdering Kolkata model in Bangalore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X