பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒத்த சிகரெட்டால் மொத்தமாக பத்தி எரிந்த கார்கள்.. பெரும் சோகத்தில் பெங்களூர்

பெங்களூருவில் விமான கண்காட்சியில் கார்கள் எரிந்து நாசமானது.

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் நடைபெற்று 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமானதற்கு காரணம் சிகரெட்தான் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மக்கள் ட்விட்டரில் கொதித்து போய் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

பெங்களூருவில் நடைபெற்று வரும் விமான கண்காட்சி அரங்கத்திற்கு வெளியேதான் எல்லா கார்கள், பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இப்படி ஒரு தீ விபத்து பட்டப்பகலில் மதிய நேரத்தில் ஏற்படும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லைதான். மளமளவென கொழுந்து விட்டு எரிந்த தீயில் வாகனங்களும் சேர்ந்து எரிந்தன.

சாம்பல்

தூக்கி எறிந்த அந்த ஒத்த சிகரெட்டால், கோடி ரூபாய் கார்கள் கருகி சாம்பலானதை வீடியோ காட்சிகளாக கண்ட பொதுமக்கள் கொதித்துபோய் ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர்.

கருப்பு புகை

அந்த படங்களில் எல்லாமே கார்கள் எரிந்து கொண்டிருக்கின்றன. கருப்பு புகையும், மஞ்சள் நெருப்பும் என மளமளவென எரிய, அடிக்கும் காற்றில் அது இன்னும் வேகமாக பரவுவதாக உள்ளது.

காய்ந்த புல்கள்

கார்கள் நிறுத்தப்பட்டிருந்த அந்த மைதானம் முழுவதும் காய்ந்து போன புல்கள் தென்படுகின்றன. அதனால்தான் ஒரு சிறு தீ பட்டதும் அப்படியே பற்றிக் கொண்டு எரிய ஆரம்பித்துள்ளது. இன்னொரு படத்தில் பாதி எரிந்த கார்களும், புத்தம் புதிதாக பளபளவென கார்கள் நின்று கொண்டிருக்கின்றன.

300 கார்கள்

ஆனால் இறுதியாக ஒரு ட்விட்டர் பதிவில் ஒரு காரும் புதுசாக அங்கு இல்லை.. எல்லாமே எரிந்து முடிந்துவிட்டது. இதில் நல்லவேளையாக எந்தவித உயிரிழப்பு இல்லாவிட்டாலும், 300 கார்கள் பற்றிக் கொண்டு எரிந்ததை பார்த்தாலே நமக்கு வயிறுதான் எரிகிறது.

பேரிழப்பு

பெங்களூரில் இதுபோன்ற ஒரு கொடூரமான தீவிபத்து நடந்ததில்லை. அதுவும் பெங்களூர் மக்களை வெகுவாக கவர்ந்த விமான கண்காட்சியில் இதுபோல ஒரு துயரச் சம்பவம் நடந்திருப்பது அந்த நகரையே ஸ்தம்பிக்க வைத்துள்ளதாம். அதை விட ஏற்பட்டுள்ள பேரிழப்புதான் மக்களை அதிர வைத்துள்ளது.

English summary
Fire accident took place at Bangalore air show video
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X