பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கர்நாடக அணைகளில் இருந்து 34,713 கன அடி நீர் திறப்பு.. காவிரியில் வெள்ளம்.. மக்களுக்கு எச்சரிக்கை

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 34,713 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 30,000 கன அடி நீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 4,713 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

34,713 cubic feet of water released from Karnataka dams, Floods in Cauvery, Warning to the people

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 4,713 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 30,000 கன அடி நீரும், காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

எல்லா இறப்பையும் கொரோனா மரணங்களாக ஏற்க முடியாது... கேரள சுகாதார அமைச்சர் அதிரடி விளக்கம்எல்லா இறப்பையும் கொரோனா மரணங்களாக ஏற்க முடியாது... கேரள சுகாதார அமைச்சர் அதிரடி விளக்கம்

ஏற்கனவே காவிரி ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. அதிக அளவு நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகங்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் அளவுக்கு மீறி கரைபுரண்டு ஓடுகிறது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து கணிசமாக உயர்ந்து வருகிறது. பாசனத்திற்கு தொடர்ந்து நீர் திறக்கப்பட்டதால் 100அடிக்கு கீழ் சரிந்து வந்த மேட்டூர் அணை நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 350 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

English summary
Heavy inflow expected to KRS dam in next few days and Kabini releasing 30 K cusecs to Tamilnadu as rain batters Kerala and Karnataka Ghat areas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X