பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெங்களூரில் 38 இடங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட்.. வெளியான அறிவிப்பு.. அடுத்து என்ன?

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில், 38 கொரோனா ஹாட்ஸ்பாட்டுகள் இருப்பதாக, பெருநகர பெங்களூர் மாநகராட்சி அறிவித்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் வசிப்போர், கடும் கட்டுப்பாடுகளின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

Recommended Video

    ஹாட்ஸ்பாட் பகுதிகள் என்பது என்ன ? தமிழகத்தில் எங்கு உள்ளது?

    ஹாட்ஸ்பாட் என்பது குறைந்தபட்சம் 6 கொரோனா நோயாளிகளை கொண்ட பகுதி என்பது பொதுவான வரையறை. ஆனால் பெங்களூர் மாநகராட்சி இதை வேறு மாதிரி வரையறுக்கிறது.

    ஏப்ரல் 11ம் தேதியிலிருந்து 28 நாட்களுக்கு உள்ளே, கொரோனா நோயாளி அவர் பழகிய ஒரு நபருக்காவது அதே பகுதியில் நோய் தொற்றை பரப்பியிருந்தால், அது ஹாட்ஸ்பாட் என கருதப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

    மண்டலங்கள்

    மண்டலங்கள்

    இதன்படி, பெங்களூர் மாநகராட்சி வெளியிட்ட பட்டியலை பாருங்கள்: ஏப்ரல் 14 ஆம் தேதி நிலவரப்படி, தெற்கு பெங்களூர் மண்டலத்தில் அதிக எண்ணிக்கையிலான ஹாட்ஸ்பாட் வார்டுகள் உள்ளன. அங்கு 12 வார்டுகள் இப்படியானவை. அதைத் தொடர்ந்து கிழக்கு மண்டலம் 9 வார்டுகளும், மேற்கு மண்டலம் 7 ​​வார்டுகளும் உள்ளன. பெங்களூர் மாநகராட்சியுடன் பிற்காலத்தில் இணைக்கப்பட்ட நகராட்சி பகுதிகளான மகாதேவபுரா மண்டலத்தில் 6 ஹாட்ஸ்பாட்கள், பொம்மனஹள்ளி மற்றும் எலகங்கா மண்டலத்தில் தலா இரண்டு வார்டுகளும் உள்ளன.

    தனிமைப்படுத்துதல்

    தனிமைப்படுத்துதல்

    ஒரு சில வார்டுகள், 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் இருப்பதன் அடிப்படையிலும் ஹாட்ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவை: ஹகதூர், கருடாச்சார்பாளையா, ஹூடி, சுபாஷ் நகர், சிங்கசந்திரா, சுத்தகுண்டேபாளையா (எஸ்ஜி பாளையா), சம்பங்கிராம் நகர், மற்றும் ராதாகிருஷ்ணா கோயில் வார்டு போன்றவையாகும்.

    38 பகுதிகள்

    இதோ 38 ஹாட்ஸ்பாட் குறித்த விவரம்: பொம்மனஹள்ளி மண்டலம்- சிங்கச் சந்திரா, பேகூர், மகாதேவபுரா- ஹகதூர், கருடாச்சார்பாளையா, வர்த்தூர், ஹூடி, ஹொரமாவு, ராமமூர்த்திநகர், கிழக்கு மண்டலம்- வசந்தநகர், கங்கா நகர், லிங்கராஜபுரா, ஜீவன்பீமா நகர், ராதாகிருஷ்ணா கோவில் வார்டு, சிவி ராமன் நகர், ராமசாமிபாளையா, மாருதிசேவா நகர், சம்பங்கி ராம் நகர்

    தெற்கு மண்டலம்

    தெற்கு மண்டலம்

    தெற்கு மண்டலம்- கிரிநகர், ஆடுகோடி, சுதகுண்டேபாளையா, ஷாஹம்பரி நகர், ஜேபிநகர், குரப்பனபாளையா, பாபுஜிநகர், ஹொசஹள்ளி, சுதாம்நகர், மடிவாளா, அத்திகுப்பே, கரிசந்திரா வார்டுகள். மேற்கு மண்டலம்- அரமனே நகரா, நாகரபாவி, நாகபுரா, சிவநகரா, ஆசாத் நகர், ஜெகஜீவன்ராம்நகர், சுபாஷ் நகர், யலகங்கா மண்டலம்- தானிச்சந்திரா, பேட்டராயனபுரா

     அடுத்து என்ன?

    அடுத்து என்ன?

    ஹாட்ஸ்பாட் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறும். நோய் பரவல் அதிகமாக இருந்தால் அந்த பகுதிகள் சீல் வைக்கப்படும். ஏற்கனவே இந்த லிஸ்டில் உள்ள பாபுஜி நகர் மற்றும், பாதராயணபுரா பகுிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

    சீல் பகுதிகள்

    சீல் பகுதிகள்

    சீல் வைக்கப்படும் பகுதிகளில், உரிய பயிற்சி பெற்ற பணியாளர்களுடன் ஆம்புலன்ஸ்கள் அவசர தேவைகளுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. வீடுகளுக்கே காய்கறி உள்ளிட்டவை சப்ளை செய்யப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் அதிகாரிகள் சென்று மக்களிடம் நோய் அறிகுறி இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்வார்கள், அல்லது கேள்வி கேட்டு தகவல் தெரிந்து கொள்வார்கள்.

    English summary
    38 hot spots declared in Bengaluru, Karnataka, Bruhat Bengaluru Mahanagara Palike (BBMP).
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X