பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கர்நாடகாவில் பகீர்- 47 ஆடுகளுக்கு கொரோனாவா?- தனிமைப்படுத்தப்பட்டதால் கிராம மக்கள் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகாவில் 47 ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா தொற்று நோய் பரிசோதனை நடத்தப்பட்டதால் கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

கர்நாடகா மாநிலம் தும்கூரு மாவட்டத்தில் சிக்கனநாயக்கன்ஹல்லி கிராமத்தில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் ஒருவர் ஆடு மேய்த்து வந்தவர்.

47 Goats quarantined after shepherd contracts Coronavirus

இந்த நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவரின் 4 ஆடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதனால் கிராம மக்களுக்கு பீதி ஏற்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததால் அந்த கிராமத்துக்கு சென்றனர்.

ஆனால் பொதுமக்கள் அதிகாரிகள், ஆடுகளை பரிசோதனை செய்ய முதலில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்பின்னர் கிராம மக்களை சமாதானப்படுத்தி ஆடுகளை தனிமைப்படுத்தி சோதனைகளை மேற்கொண்டனர்.

"பாசிட்டிவ்".. ஷாக் ஆன ஓ.ராஜா.. வீட்டிலிருந்து வெளியிலேயே செல்லாத நிலையில் தொற்று வந்தது எப்படி?

இந்த பரிசோதனைகள் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் இறந்த ஆடுகளின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் மாதிரிகளும் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

இது தொடர்பாக மருத்துவ துறை இயக்குநர் பைரே கவுடா கூறுகையில், மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு கொரோனா பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது வதந்தியாகவே இருக்கிறது. இந்த சோதனை மாதிரிகள் போபாலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகளுக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

English summary
47 goats have been kept in isolation at a village in Tumakuru district in Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X