பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விநாயகர் சிலை கரைப்பின் போது சோகம்.. ஏரியில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி.. கர்நாடகாவில் பரபரப்பு!

கர்நாடகாவில் உள்ள கோலார் தங்கவயலில் விநாயகர் சிலை கரைப்பின் போது ஏரியில் மூழ்கி 6 சிறுவர்கள் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள கோலார் தங்கவயலில் விநாயகர் சிலை கரைப்பின் போது ஏரியில் மூழ்கி 6 சிறுவர்கள் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுக்க விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்திக்காக செய்யப்பட்ட சிலைகள் எல்லாம் நாடு முழுக்க நேற்று முதல் நாளில் இருந்து கரைக்கப்பட்டு வருகிறது.

6 Children died in Karnataka in Vinayakar Chathurthi Festival

அதன்படி சென்னையில் நேற்று முதல்நாள் மெரினாவில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் இந்த சிலை கரைப்பு விழா நடந்து வருகிறது.

இந்த நிலையில்தான் கர்நாடகாவில் விநாயகர் சிலை கரைப்பின் போது சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள கோலார் தங்கவயலில் விநாயகர் சிலை கரைப்பின் போது ஏரியில் மூழ்கி 6 சிறுவர்கள் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலீஸ் தடுப்பையும் மீறி அந்த சிறுவர்கள் சிலையை எடுத்துக் கொண்டு ஏரிக்குள் இறங்கி உள்ளனர். ஆழமாக தூர்வாரப்பட்ட இடத்திற்கு சென்றவர்கள், சிலையின் எடையால் அழுத்தப்பட்டு தண்ணீருக்குள் முழ்கி உள்ளனர்.

இதில் 6 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அதேபோல் 2 சிறுவர்கள் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
6 Children died in Karnataka in Vinayakar Chathurthi Festival in KGF.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X