Just In
கடன் தொல்லை.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலையால் பரபரப்பு
பெங்களூர்: கர்நாடகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொப்பல் மாவட்டம் மேதகல் கிராமத்தை சேர்ந்தவர் சேகரய்யா. விவசாயி. இவர் விவசாயம் செய்வதற்காக கடன் வாங்கியுள்ளார். விளைச்சல் சரியில்லாத நிலையில் இவரால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.

இதனால் இவருக்கு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தனர். மனஉளைச்சலுக்கு ஆளான சேகரய்யா தற்கொலை செய்வது என முடிவு செய்தார். அதன்படி மனைவி, 4 மகள்களுக்கு விஷம் கொடுத்துள்ளார்.
அவர்கள் இறந்தவுடன் சேகரய்யாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.