பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகாவில் பாஜக எம்எல்ஏ ஆலையில் பாய்லர் வெடித்தது… 6 பேர் பலி.. 5 பேர் கவலைக்கிடம்

Google Oneindia Tamil News

பெங்களுரு : கர்நாடகாவில் சர்க்கரை ஆலையில் கொதிகலன் வெடித்து எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். 5 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள முத்ஹோல் என்ற பகுதியில் பாஜக எம்எல்ஏ முருகேஷ் மற்றும் அவர்களது சகோதரர்கள் இந்த ஆலையை நடத்தி வருகின்றனர்.நிரானி சுகர்ஸ் என்ற பெயர் கொண்ட ஆலையில் இன்று விடுமுறை என்ற போதிலும் தொழிலாளர்கள் வழக்கம் போல வேலை செய்து கொண்டிருந்தன்.

6 workers were killed and 5 injured after a boiler exploded in a sugar factory, karnataka

அப்போது ஆலையினுள் எதிர்பாராத விதமாக திடீரென விபத்து ஏற்பட்டது. சர்க்கரை ஆலையில் உள்ள கொதிகலன் வெடித்துச் சிதறியது. அப்போது 10க்கும் மேற்பட்டோர் ஆலையினுள் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.

விபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்தை தொடர்ந்து மீட்புக்குழுவினரும், மருத்துவக்குழுவினரும் முகாமிட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் இல்லை என்ற போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளனர்.

English summary
six people died and five have been critically injured in a boiler blast in Nirani sugars at Mudhol, Bagalkot district, Karnataka. About ten people were working in the distillery unit of the sugar factory when the accident occurred.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X