யூஸ் பண்ண ஆணுறையை.. கோயில் உண்டியலில் போட்ட 60 வயது ஆசாமி.. கொத்தாக தூக்கி சென்ற போலீஸ்..!
பெங்களூரு: மங்களூருவில் பல கோயில்களின் உண்டியல்களில் கிடந்த ஆணுறைகளை பார்த்து அதிகாரிகள் மிரண்டே போய்விட்டனர்.. இது சம்பந்தமாக ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மங்களூரில் நிறைய வழிபாட்டு தலங்கள் உள்ளன.. சுற்றுவட்டாரம் மட்டுமல்லாமல், பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் இங்குள்ள கோயில்களுக்கு வந்து செல்வது வழக்கம்..
சென்னையில் நாளை இரவு 12 மணி முதல் காலை 5 மணிவரை.. வண்டியோடு வெளியே வராதீர்கள்.. அதிரடி உத்தரவு
இந்நிலையில், கடந்த டிசம்பர் 27ம் தேதி கோராஜானா பகுதியில் உள்ள கோவில் உண்டியலில் ஆணுறை ஒன்று இருந்துள்ளது.. அந்த ஆணுறை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு, அதன்பிறகு கோயில் உண்டியலில் போடப்பட்டுள்ளது..

ஆணுறை
வழக்கம்போல் உண்டியலை உடைத்த கோயில் நிர்வாகம், திடீரென அதில் ஆணுறை இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. அதனால் உடனடியாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது... எனவே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கோயிலில் இருக்கும் சிசிடிவி கேமராவையும், அந்த பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் மற்ற சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர்..

உண்டியல்
அதில், ஒருவர் உண்டியலில் எதையோ போட்டு சென்றது பதிவாகி இருந்தது... இதையடுத்து, அந்த நபரின் அடையாளத்தை வைத்து, அவரை போலீசாரும் கண்டுபிடித்தனர்.. துருவி துருவி நடத்தப்பட்ட விசாரணையில், அவர் இதுபோன்ற ஏராளமான கோவில்களின் உண்டியல்களிலும் ஆணுறையை போட்டு வருவதை ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக மங்களூர் போலீஸ் கமிஷனர் சொல்லும்போது, பல்வேறு கோவில்களில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அந்த நபர் மீது 5 கேஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது...

ஆட்டோ டிரைவர்
அவர் பெயர் தேவதாஸ் தேசாய்.. 62 வயதாகிறது.. 20 வருடங்களாகவே மங்களூரில் வசித்து வருகிறார்.. 15 வருடமாக ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.. இவர் ஏற்கனவே, அந்த பகுதியில் உள்ள மசூதிகளில், பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை வீசி வந்துள்ளார்... ஆட்டோ டிரைவர் என்பதால், எந்தெந்த மசூதிகளில், கோயில்களில் ஆணுறையை வீசினார் என்பதை தெளிவாக சொல்கிறார்..

விசாரணை
இந்த பயன்படுத்திய ஆணுறைகளை எல்லாம், குப்பைகளில் இருந்து எடுத்து வருவாராம்.. அதை கொண்டு வந்து கோயில், மசூதிகளில் போட்டுவிட்டு செல்வாராம்.. இப்போது தொடர்ந்து தேவதாஸிடம் விசாரணை நடந்து வருகிறது... கோயில் உண்டியலில் ஆணுறையை வீசி செல்வது யாராக இருக்கும் என்ற குழப்பம் நீண்ட நாட்களாகவே நீடித்து வந்த நிலையில், தற்போது குற்றவாளி கைதாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.