பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகாவில் இருந்து காவிரியில் 75000 கனஅடி நீர் திறப்பு - மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து 75,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள

Google Oneindia Tamil News

கர்நாடகா: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் அணைகள் நிரம்பி வருகின்றன. அங்குள்ள கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து 75,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. காவிரியில் தண்ணீர் அதிகஅளவில் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரில் அளவு 35000 கடி அடியாக உயர்ந்துள்ளது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் விரைவில் மேட்டூர் அணை நீர்மட்டம் விரைவில் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைகள் நிரம்பி வருகின்றன. கர்நாடகா அணைகளில் இருந்து விநாடிக்கு 75000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

75000 cubic feet of water opening in Cauvery from Karnataka - flooding in Falls

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து விநாடிக்கு 40,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கபினி அணையில் இருந்து விநாடிக்கு 35,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் பகுதிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளநீர் அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் நீராடவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி இடைத்தேர்தல்: வெற்றி பெறும் பாஜக வேட்பாளர் நிச்சயம் மத்திய அமைச்சராவார்.. எல். முருகன்கன்னியாகுமரி இடைத்தேர்தல்: வெற்றி பெறும் பாஜக வேட்பாளர் நிச்சயம் மத்திய அமைச்சராவார்.. எல். முருகன்

இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணை நீர்மட்டம், 89.77 அடி, நீர் இருப்பு, 52.389 டி.எம்.சி.,யாக இருந்தது. நீர்வரத்து, 12 ஆயிரத்து, 450 கன அடியாக இருந்தது. பாசனத்துக்கு, 18 ஆயிரத்து, 700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 35000 கன அடியாக உயர்ந்துள்ளது.

English summary
Dams in Karnataka are overflowing due to heavy rains in the Cauvery catchment area. 75,000 cubic feet of water is being released from the KRS and Kabini dams there. The water level in the Mettur dam has risen to 35,000 feet due to the high water level in the Cauvery
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X