பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பைசா கோபுரம் போல் திடீரென்று சாய்ந்த அடுக்குமாடி குடியிருப்பு.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்!

பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று திடீரென்று சாய்ந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    4 storey building in Bengaluru tilts suddenly | திடீரென்று சாய்ந்த அடுக்குமாடி குடியிருப்பு - வீடியோ

    பெங்களூர்: பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று திடீரென்று சாய்ந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் கட்டிடம் முழுவதாக கீழே விழாமல் சாய்ந்த நிலையில் தொங்கி கொண்டு இருக்கிறது.

    பெங்களூரில் நிறைய அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கிறது. நகரம் முழுக்க வானுயர குடியிருப்புகள் அதிக அளவில் இருக்கிறது. இந்த நிலையில்தான் பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று திடீரென்று சாய்ந்தது.

    பெங்களூரில் ஹெப்பால் கேம்பபுரா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றுதான் இப்படி சரிந்துள்ளது. பைசா கோபுரம் போல இந்த கட்டிடம் சரிந்து உள்ளது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    திகில் படங்களை மிஞ்சும் கொடூரம்.. ஜப்பான் கப்பலில் 61 பேருக்கு கொரோனா.. கடலில் தவிக்கும் 3500 பேர்!திகில் படங்களை மிஞ்சும் கொடூரம்.. ஜப்பான் கப்பலில் 61 பேருக்கு கொரோனா.. கடலில் தவிக்கும் 3500 பேர்!

    நேற்று

    நேற்று

    நேற்று மாலை திடீர் என்று இந்த கட்டிடம் சரிந்தது. மக்கள் உள்ளே இருக்கும் போதே திடீர் என்று கட்டிடம் சரிந்தது. ஆனால் கட்டிடம் முழுவதாக கீழே விழுந்து நொறுங்கவில்லை. இந்த கட்டிடம் ஐந்து வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், மொத்தம் 8 வீடுகள் உள்ளே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    வெளியேற்றம் செய்தனர்

    இந்த வீடுகளில் உள்ளே எல்லோரும் தற்போது வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். மொத்தம் 8 குடும்பம் இங்கே இருந்தது. சுமார் 35 பேர் இங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். எதிர் வீட்டில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது அங்கு தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழ வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    என்ன காரணம்

    அனுமதி வாங்காமல் கட்டிடம் கட்டியதுதான் இதற்கு காரணமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். இது தொடர்பாக பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் விசாரிக்க தொடங்கி உள்ளனர். இங்கு 5 மாடி உயரத்திற்கு கட்டிடம் கட்ட அனுமதி கொடுத்தது யார். இந்த கட்டிடம் வரும் முன் இங்கே வேறு என்ன கட்டிடம் இருந்தது. கீழே நீர்நிலைகள் எதுவும் இருந்ததா என்று விசாரித்து வருகிறார்கள்.

    யார் போலீஸ்

    யார் போலீஸ்

    இந்த அபார்ட்மெண்ட் ஓனர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவரை கைது செய்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். பெங்களூரில் அடுக்குமாடி கட்டிடங்களுக்கு முறையின்றி அனுமதி வழங்கப்படுவதாக புகார் உள்ளது. கேரளாவில் சமீபத்தில்தான் இதுபோன்ற அடுக்குமாடி கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. முறையின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடங்கள் வெடி வைத்து தகர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    A 5 story building in Bengaluru tilts suddenly yesterday like Pisa tower - Images goes viral .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X