பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வீட்டு தோட்டம், மாடி தோட்டம் வரிசையில் ஓடும் பேருந்தில் மினி தோட்டம்.. அசத்தும் அரசு பஸ் டிரைவர்

Google Oneindia Tamil News

பெங்களூரு: ஓடும் பேருந்தில் மினி தோட்டத்தை பராமரித்து வரும் அரசு பஸ் டிரைவரை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

மரம், செடி, கொடி, பூ, பழம் ஆகியவற்றை விரும்பாதவர்கள் இருக்க மாட்டார்கள். நம் வீடோ அலுவலகமோ அதை சுற்றி வைப்பதை நாம் யாரும் விரும்பாமல் இருக்க மாட்டோம்.

இது போல் அனைவரும் இயற்கை ஆர்வலர்கள்தான். என்ன ஒன்று, சிலர் செடி கொடிகளை வளர்க்க ஆசை இருக்கும் ஆனால் இடம் இருக்காது. இன்னும் சிலர் மணி பிளான்ட்டையாவது வீட்டில் வீணாக இருக்கும் வாட்டர் கேன்களில் வளர்ப்பது வழக்கம்.

அக்னி வெயில்.. அனல் காற்று.. சாலைகளில் குறைந்த மக்கள் கூட்டம்! அக்னி வெயில்.. அனல் காற்று.. சாலைகளில் குறைந்த மக்கள் கூட்டம்!

செடிகள்

செடிகள்

இன்னும் சிலர் மாடியில் தோட்டம் போடுதல், பிளாஸ்டிக் பக்கெட், தொட்டி, வாட்டர்கேன்களில் சிறிய சிறிய செடிகளை வளர்ப்பதும் வாடிக்கையாகும். இதற்காக செடிகளை வாங்கும் நர்சரிகளுக்கு கார்களில் வந்து ஏராளமான செடிகளை வாங்குவது வழக்கம்.

மக்கள்

மக்கள்

இதெல்லாம் ஆச்சரியம் இல்லை. ஆனால் பெங்களூரில் ஒருவர் தான் இயக்கும் அரசு பேருந்தில் சிறிய தோட்டத்தை வைத்துள்ளார். இதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல்

பெங்களூரில் அரசு பேருந்து ஓட்டுநராக உள்ளவர் நாராயணப்பா. கடந்த 27 ஆண்டுகளாக பேருந்து ஓட்டுநரான இவர் பைலாசந்த்ரா- யஷ்வந்த்பூர் மார்க்கத்தில் பேருந்து ஓட்டி வருகிறார். இயற்கை ஆர்வலரான இவர் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்தார்.

சிறிய தோட்டம்

சிறிய தோட்டம்

அதற்காக தான் இயக்கும் பேருந்திலேயே சிறிய சிறிய செடிகளை வளர்த்து மினி தோட்டத்தையே பராமரித்து வருகிறார். இதுகுறித்து நாராயணப்பா கூறுகையில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தோட்டத்தை பராமரித்து வருகிறேன் என்றார்.

தினந்தோறும் தண்ணீர்

பேருந்தில் 14 வகையான செடிகளை பேருந்துக்கு முன்பும் பின்புறத்திலும் வைத்துள்ளார். இதற்கு நாராயணப்பா தினந்தோறும் நீர் ஊற்றுகிறார். இதில் பயணம் செய்யும் பயணிகள் புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களிலும் பரப்பிவிடுகின்றனர். இதனால் நேரில் மட்டுமல்ல, நாராயணப்பாவுக்கு சமூகவலைதளங்களிலும் பாராட்டுதான்.

English summary
A bus driver has found a unique way, that is creating mini garden in running bus to create awareness about keeping the environment green among the passengers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X