பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெங்களூரில் சூரியனை சுற்றி தெரிந்த மர்ம ஒளிவட்டம்.. என்ன காரணம்? ஏன் தோன்றியது?

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரில் சூரியனை சுற்றி தெரியும் ஒளிவட்டம் மக்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. ஏன் இந்த ஒளி வட்டம் திடீர் என்று தோன்றியது. இதற்கு காரணம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

உலகம் பல ஆச்சர்யங்களை கொண்டது. இந்த பூமியிலேயே நாம் நிறைய உயிரினங்களை நேரில் பார்த்தது இல்லை, கடலில் நமக்கு தெரியாத பல கோடி உயிரினங்கள் வாழ்கின்றது. அதேபோல்தான் சூரியனும் வான் கோள்களும் நிறைய ஆச்சர்யங்களை சுமந்து நிற்கிறது.

அப்படி ஒரு ஆச்சர்யம்தான் இன்று பெங்களூரில் நிகழ்ந்தது. பெங்களூரில் சூரியனை சுற்றி பெரிய ஒளியுடன் வட்டம் ஒன்று தெரிந்தது. இந்த ஒளிவட்டம் தெரிந்த கொஞ்ச நேரத்தில் அது இணையம் முழுக்க வைரலானது.

என்ன வட்டம்

என்ன வட்டம்

பொதுவாக இந்த ஒளிவட்டம் சூரியன் மட்டுமில்லாமல் சந்திரனை சுற்றியும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை விஞ்ஞானிகள் 22 டிகிரி ஹாலோஸ் என்று அழைப்பார்கள். இதற்கு காரணம், இது சரியாக சூரியனில் இருந்து 22 டிகிரியில் அமைந்து இருக்கும் என்பதால். பொதுவாக இந்த வட்டம் உருவானால் சில மணி நேரத்தில் மழை பெய்யும் என்பார்கள்.

உண்மைதான்

உண்மைதான்

ஆம் அதில் உண்மை இருக்கிறது. பொதுவாக இந்த வட்டம் உருவானால் அந்த பகுதியில் அந்த நாள் மழை பெய்யும் . மேலும் மேகம் இல்லாத தெளிவான வானத்தில்தான் இந்த வட்டம் உருவாகும். இந்த வட்டத்திற்கு பனிதான் காரணம். இந்த வட்டத்தில் சிறிய சிறிய தண்ணீர் துளிகள் மேகம் போல சிறிதாக மிதந்து கொண்டு இருக்கிறது. தொலைநோக்கி வழியாக இதை பார்த்தால் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். குட்டி குட்டி மைக்ரோ ஐஸ் கட்டிகளும் இதில் இருக்கும்.

எப்படி தெரிகிறது

எப்படி தெரிகிறது

சூரியனின் ஒளியை பிரதிபலிப்பதால் இது நமது கண்ணுக்கு தெரிகிறது. இதை நன்றாக கவனித்து பார்த்தால் இதன் உட்பக்கம் சிவப்பு நிறத்திலும், வெளிப்பக்கம் நீல நிறத்திலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அதில் இருக்கும் நீர் துளிகளே காரணம். அதேபோல் இதில் ஐஸ் துகள்கள் மட்டுமில்லாமல் புகையும், மாசும் படிந்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேடுகிறார்

தேடுகிறார்

இந்த வட்டம் குறித்து தற்போது இணையத்தில் பல்வேறு மக்கள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த வட்டம் காரணமாக பொதுவாக இன்று மாலை பெங்களூரில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உலகம் முழுக்க சூரியனை சுற்றி இந்த வட்டம் தோன்றி மறைவது இயல்புதான்.

English summary
A circle formes around Sun today in Bangalore: Here is the reason and unknown history behind it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X