பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெங்களூரு மக்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை.. மாநகராட்சி சூப்பர் அறிவிப்பு

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெங்களூரு மக்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் அறிவித்துள்ளார்.

இந்திய அளவில் கர்நாடகா மாநிலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தற்போது ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூருவில் சென்னையில் ஜூன் மாதத்தில் இருந்ததை போன்று தொற்று பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெங்களூருவில் மட்டும் 57,396 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

a free corona test will be conducted for the people of Bangalore

நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்வதால் பெங்களூரு மக்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை செய்யப்படும் என பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " பெங்களூருவில் தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் வாங்கப்படுகிறது. இதன் காரணமாக ஏழை, எளிய மக்கள் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த விரும்புவது இல்லை.

எனவே பெங்களூரு மாநகராட்சியில் உள்ள 8 மண்டலங்களிலும் மக்களுக்கு இலவசமாக கொரோனா பரிசோதனை செய்ய உள்ளோம். எனவே மக்கள் மண்டல அலுவலக செல்போன் எண்களை தொடர்பு கொண்டு இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம். ஏழை, எளிய மக்களும் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்லாம். நோய் பரவுவதை கட்டுப்படுத்த இந்த முடிவினை நாங்கள் எடுத்துள்ளோம்.

சென்னையில் சூப்பர் மாற்றம்.. கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை சரசரவென சரிவுசென்னையில் சூப்பர் மாற்றம்.. கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை சரசரவென சரிவு

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 50 ஆயிரம் ரேபிட் ஆன்டிஜென் கருவிகளை மத்திய அரசிடம் இருந்து பெற்று இருந்தோம். அந்த கருவிகள் மூலம் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு உள்ளோம். 70 நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்களை நகர் முழுவதும் அனுப்பி இருக்கிறோம்.. இலவச கொரோனா பரிசோதனை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பெங்களூருவில் 12,668 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது" என்றார்

பெங்களூரு மாநகராட்சியில் உள்ள 8 மண்டலங்களின் உதவி மையங்களின் தொலைபேசி எண்கள் விவரம்:

* எலகங்கா - 9480685948

* மகாதேவபுரா - 080-23010101/ 23010102

* பொம்மனஹள்ளி - 8884666670

* ஆர்.ஆர்.நகர் - 080-28601050/ 28600954

* பெங்களூரு தெற்கு - 8431816718

* பெங்களூரு கிழக்கு - 7411038024

* பெங்களூரு மேற்கு - 080-68248454

* தாசரஹள்ளி - 080-28394909/3688

English summary
Bangalore. Corporation Commissioner Manjunath Prasad has announced that a free corona test will be conducted for the people of Bangalore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X