பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கள்ளக்காதல் கொலை வழக்கில் 14 வருடம் ஜெயில் தண்டனை அனுபவித்தவர்.. எம்பிபிஎஸ் பட்டம் பெற்று சாதனை

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 18-02-2020 | Oneindia tamil Morning news

    பெங்களூரு: கொலை வழக்கில் 14 வருடம் சிறையில் தண்டனை அனுபவித்தவர் எம்பிபிஎஸ் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த சம்பவ கர்நாடகாவின் கல்புர்கியில் நடந்துள்ளது.

    அப்படி டாக்டர் பட்டம் பெற்றவர் பெயர் சுபாஷ் துகாராம் பாட்டீல். இவரது சொந்த ஊர் கர்நாடகாவின் அப்சல்புரா அருகே பூசாகா கிராமம் ஆகும்.

    பெங்களூருவில் உள்ள மருத்துவ கல்லூரியில் 2002ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார் சுபாஷ். அங்கே மகாலட்சுமிபுரத்தில் வாடகை வீட்டில் தங்கி படித்து வந்தார்.

    கொலை

    கொலை

    கலால்துறை குத்தகைதாரராக இருந்த அசோக் குத்தேதார் என்பவரின் மனைவி பத்மாவதியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது. இதனால் ஆத்திரம் அடைந்த அசோக் குத்தேதாருக்கு தெரிந்ததால் இருவரையும் கடுமையாக கண்டித்தார். இதனால் காதலுக்கு இடையூறாக இருந்த அசோக் குத்தேதாரை கடந்த 2002ம் ஆண்டு சுபாஷ் கொலை செய்தார்.

    முதுகலை பட்டம்

    முதுகலை பட்டம்

    இந்த வழக்கில் சுபாஷூக்கு 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்த போதிலும். சுபாஷ்க்கு படிக்கும் ஆர்வம் குறையவில்லை. முதுகலை இதழியல் பட்டம் முடித்தார். கடந்த 2016 ஆகஸ்ட் 15ம் தேதி சிறை தண்டனை முடிந்தது. அன்று சுபாஷ் விடுதலையாகி புதிய மனிதாக வெளியே வந்தார்.

    துணைவேந்தர் அனுமதி

    துணைவேந்தர் அனுமதி

    வந்தவர் நேராக தான் படித்து பாதியில் விட்ட எம்பிபிஎஸ் படிப்பை தொடர அனுமதிகோரி ராஜிவ் காந்தி சுகாதாரம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்து பேசினார். சுபாஷின் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் மீதியுள்ள இரண்டாண்டுகள் முடிக்க துணைவேந்தர் அனுமதி வழங்கினார்.

    எம்பிபிஎஸ் தேர்ச்சி

    எம்பிபிஎஸ் தேர்ச்சி

    அதன்படி, கல்புர்கியில் உள்ள கர்நாடக கல்வி குழுமத்தின் மகாதேவப்பா ரேவூரா மருத்துவக் கல்லூரியில் சுபாஷ் சேர்ந்து படித்தார். தன்னை விட 18 வயது குறைவான மாணவ, மாணவிகளுடன் எந்த கூச்சமுமில்லாமல் படித்து தேர்ச்சி பெற்றார். ரெகுலராக படிக்கும் மாணவர்களே பரிட்சையில் பெயில் ஆகி அரியவர் வைத்து வருகிறார்கள். இந்நிலையில் படித்த இரண்டாண்டு தேர்வில் எந்த அரியரும் இன்றி சுபாஷ் தேர்ச்சி பெற்றுள்ளார். கல்லூரியில் பட்டமளிப்பு விழா 2 நாட்களுக்கு முன் நடந்திருக்கிறது.. இதில் எம்பிபிஎஸ் பட்டம் முடித்த சுபாஷ் பாட்டீல் பட்டம் பெற்றுள்ளார். அவரை சக மாணவர்கள் கைதட்டிஆரவாரம் செய்து பாராட்டினார்கள்.

    English summary
    a karnataka man pass mbbs exam, received doctor degree after 14 years jail sentence overhe killed a man illegal affair issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X