பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்திற்கு எதிராக கன்னட அமைப்பு ஆவேசம்.. அலறிய மீடியாக்கள்.. காரணம் மைசூர் பாக்.. கடைசியில் ஷாக்

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்திற்கு எதிராக கன்னட அமைப்பு ஆவேசம்.. என்ன காரணம் தெரியுமா ?

    பெங்களூர்: கிண்டலுக்காக அறிவியலாளரும், எழுத்தாளருமான ஆனந்த் ரங்கநாதன் கூறிய ஒரு டுவிட்டர் கருத்தால் தமிழகத்திற்கு எதிராக, கன்னட அமைப்பினர் பெரும் போராட்டத்தில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மொத்த சர்ச்சையும் ஆரம்பித்தது, ஆனந்த் ரங்கநாதனின் ஒரே ஒரு ட்வீட்டில் இருந்துதான். அதுவும் காமெடியாக போட்ட ட்வீட்டில் இருந்துதான் என்றால் நம்ப முடிகிறதா.

    விஷயம் இதுதான். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சமீபத்தில் சந்தித்துள்ளார் ஆனந்த். அப்போது மைசூர் பாக் இனிப்பை பரிசாக வழங்கியுள்ளார். இந்த படத்தை ட்விட்டரில் ஷேர் செய்திருந்தார் ஆனந்த் ரங்கநாதன்.

    வேடிக்கை

    வேடிக்கை

    இத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை. மைசூர்பாக்கிற்கு புவிசார் குறியீடு அந்தஸ்த்தை தமிழகத்திற்கு வழங்கியதற்காக நான் நிர்மலா சீதாராமனை பாராட்டினேன் என்று, வேடிக்கையாக அதில் அவர் ஆனந்த் ரங்கநாதன் தெரிவித்திருந்தார். அவ்வளவுதான், விஷயம். கன்னட மீடியாக்கள் சீறிவிட்டன.

    கன்னட டிவி சேனல்கள்

    கர்நாடகாவிலிருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்மலா சீதாராமனுக்கு இரட்டை முகம் இருக்கிறது. தமிழகத்திற்குதான் அவர் ஆதரவாக செயல்பட்டுள்ளார்.. இப்படியெல்லாம் கடும் வார்த்தைகளுடன் செய்திகளை ஒளிபரப்ப ஆரம்பித்தன கன்னட டிவி சேனல்கள்.

    வாட்டாள் நாகராஜ்

    வாட்டாள் நாகராஜ்

    இது மட்டுமா, போராட்ட களத்திற்கே வந்துவிட்டார் வாட்டாள் நாகராஜ். அவர் பெங்களூரில் அளித்த பேட்டியில், காவிரி, மேகதாது என பல விஷயங்களில் நாம் பொறுமையாக உள்ளோம். இப்போது மைசூர் பாக்கிற்கும் தமிழகம் உரிமை கொண்டாடுகிறது. ஸ்டாலினாக இருக்கட்டும், அல்லது வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். உஷார்.. இவ்வாறு அவர் பேட்டியளித்தார். போராட்டங்களை நடத்த கன்னட அமைப்பினர் தயாராகிவிட்டனர்.

    ஓவரா போயிட்டாங்களேப்பா

    ஓவரா போயிட்டாங்களேப்பா

    இந்த நிலையில்தான், நிலைமை விபரீதமாகுவதை அறிந்த ஆனந்த் ரங்கநாதன், நான் கேலியாக போட்ட ஒரு ட்வீட்டை வைத்து இவ்வளவு தூரம் போய்விட்டீர்களா, அப்படியெல்லாம் எந்த புவிசார் குறியீடும் தமிழகத்திற்கு வழங்கப்படவில்லை என்று ட்வீட் போட்டு விளக்கியுள்ளார். இதன்பிறகு ஒரு வழியாக தங்கள் தவறை உணர்ந்த கன்னட சேனல்கள் இந்த செய்தியை ஒளிபரப்பவில்லை. வாட்டாள் முகத்திலும் இப்போது அப்செட்தான். நாட்டுல அநியாயத்துக்கு போராட்டக்காரங்கள் இருக்காங்களேப்பா!

    English summary
    In a sarcastic tweet on the famous Karnataka delicacy 'Mysore Pak', scientist and commentator Anand Ranganathan sent out a series of tweets on the origins of Mysore Pak leading to a fresh outrage against neighbouring Tamil Nadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X