பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்களுடன் பாத யாத்திரையாக வரும் நாய்.. 500 கி.மீ. கடந்தும் வருது.. வீடியோ!

Google Oneindia Tamil News

Recommended Video

    Stray dog tags along Sabari pilgrims, treks 480km and counting

    பெங்களூரு: ஆந்திராவின் திருமலையில் இருந்து சபரிமலை பாதயாத்திரையாக புறப்பட்டு வந்து கொண்டிருக்கும் 13 பக்தர்களை சுமார் 500 கிலோமீட்டர் கடந்தும் ஒரு நாய் அவர்களை பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    ஆந்திராவைச் சேர்ந்த 13 ஐயப்ப பக்தர்கள் கடந்த அக்டோபர் 31ம் தேதி திருப்பதி திருமலையில் இருந்து பாத யாத்திரையாக சபரிமலைக்கு புறப்பட்டனர். அவர்களை ஒரு நாய் பின் தொடர ஆரம்பித்தது. ஆரம்பித்தில் கொஞ்ச தூரம் வந்த பின்பு சென்றுவிடும் என்று ஐயப்ப பக்தர்கள் நினைத்தார்கள்.

     A stray dog following Ayyappa devotees, who are on a pilgrimage to Sabarimala walked 480 km so far

    ஆனால் அந்த நாய் அவர்களை விடாமல் பல நாட்களாக பின்தொடர்ந்து நடந்து வருகிறது. அவர்கள் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட தூரம் நடந்து வந்து இரவில் ஓய்வெடுக்கிறார்கள். பின்னர் மறு நாள் காலை நடக்கிறார்கள்.

    இப்படி தினமும் நடந்து தற்போது அவர்கள் சுமார் 480 கிலோமீட்டர் கடந்து கர்நாடகாவின் சிக்மங்களுரூ மாவட்டம் கோட்டிக்கெராவை அடைந்து விட்டார்கள். ஆனாலும் அந்த நாய் அவர்களை பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அந்த நாய்க்கு இவர்கள் உணவு கொடுத்து நெகிழ்ச்சியுடன் அழைத்து சென்று கொண்டிருக்கிறார்கள்.

    ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு வந்த 2 பெண்கள்... தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிய கேரள போலீஸ்ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு வந்த 2 பெண்கள்... தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிய கேரள போலீஸ்

    இது தொடர்பாக சபரிமலைக்கு பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் கூறுகையில் "நாங்கள் முதலில் நாயைக் கவனிக்கவில்லை. ஆனால் நாங்கள் செல்லும் வழியெல்லாம் தொடர்ந்து வந்தது. எங்களுக்கு பின்னால் இப்போதும் வந்து கொண்டே இருக்கிறது. நாங்களே உணவு தயாரித்து நாய்க்கு வழங்குகிறோம். ஒவ்வொரு வருடமும் சபரிமலை யாத்திரை செல்வோம். ஆனால் இந்த வருடம் இது ஒரு புதிய அனுபவம்" என்றனர்.

    English summary
    Karnataka: A stray dog has been following a group of 13 Ayyappa devotees, who are on a pilgrimage to Kerala's Sabarimala & has walked 480 km so far.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X