பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே ஒரு வீடியோகால்தான் காரணம்.. எடியூரப்பா ஆட்சி அமைக்க அமித் ஷா ஓகே சொன்னது எப்படி தெரியுமா?

கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சி அமைக்க பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஓகே சொன்னது எப்படி என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Yediyurappa Master Plan : ஆட்சி பொறுப்பேற்றதும் முதல்வேலை இதுதான்.. எடியூரப்பாவின் முடிவு- வீடியோ

    பெங்களூர்: கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சி அமைக்க பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஓகே சொன்னது எப்படி என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

    இன்று கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைய உள்ளது. இன்று மாலை பாஜக சார்பாக எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

    எடியூரப்பா இன்னும் ஒரு வாரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார். மூன்று நாட்களுக்கு முன்பு மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அங்கு கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

    கருணாநிதி vs ஜெயலலிதா பாணி மோதல்.. பதவியேற்கும் முன்பே குமாரசாமிக்கு ஷாக் கொடுத்த எடியூரப்பா உத்தரவு கருணாநிதி vs ஜெயலலிதா பாணி மோதல்.. பதவியேற்கும் முன்பே குமாரசாமிக்கு ஷாக் கொடுத்த எடியூரப்பா உத்தரவு

    என்ன சந்தேகம்

    என்ன சந்தேகம்

    பாஜக முதலில் கர்நாடகாவில் அவசர அவசரமாக ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்று செய்திகள் வந்தது. 105 எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு மைனாரிட்டி ஆட்சி அமைக்க பாஜகவிற்கு விருப்பம் இல்லை. ஆட்சி அமைத்து பின் உடனே ஆட்சி கவிழ்ந்தால் மக்கள் மத்தியில் அவமானம் ஆகும் என்று பாஜக கருதி உள்ளது.

    அனுமதி இல்லை

    அனுமதி இல்லை

    இதனால்தான் கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சி அமைக்க பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார். 105 எம்எல்ஏக்கள் என்பது மிக சரியான மெஜாரிட்டி. இதை வைத்துக் கொண்டு ஆட்சியை பிடிப்பது சரியாக இருக்காது என்று அமித் ஷா கூறியுள்ளார். ஆனால் ஆட்சி அமைப்பதில் எடியூரப்பா குறியாக இருந்துள்ளார்.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    இந்த நிலையில்தான் பாஜக தேசிய தலைமை சார்பாக மும்பையில் உள்ள 16 காங்கிரஸ் மற்றும் மஜத அதிருப்தி எம்எல்ஏக்களிடம் பேசி இருக்கிறார்கள். அதாவது 16 அதிருப்தி எம்எல்ஏக்களிடம் வீடியோ கால் மூலம் பேசிய அமித் ஷா, அதன் பின்பே ஆட்சி அமைக்க ஓகே சொல்லி இருக்கிறார். அதில் 16 அதிருப்தி எம்எல்ஏக்களும், நாங்கள் கண்டிப்பாக எடியூரப்பா ஆட்சிக்கு ஆதரவு அளிப்போம் என்று கூறியுள்ளனர்.

    இன்னும் சிலர்

    இன்னும் சிலர்

    எடியூரப்பா ஆட்சிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு அளிக்க வேண்டும் என்றால் ஆதரவு அளிப்போம். இல்லையென்றால் ராஜினாமா செய்து அதன் மூலம் எடியூரப்பா ஆட்சி அமைக்க வழி வகுப்போம். கண்டிப்பாக காங்கிரஸ் - மஜத கூட்டணிக்கு செல்ல மாட்டோம் என்று வீடியோ காலில் கூறியுள்ளனர்.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இந்த வீடியோ காலில் எம்எல்ஏக்கள் ஆதரவு உறுதியான பின்புதான் ஆட்சி அமைக்கும் திட்டத்தை அமித் ஷா கையில் எடுத்துள்ளார். இந்த வீடியோ காலின் போது ஜே பி நட்டா உள்ளிட்ட முக்கிய பாஜக உறுப்பினர்கள் உடன் இருந்துள்ளனர். இதுதான் இன்றே எடியூரப்பா ஆட்சி அமைக்க காரணம் என்கிறார்கள்.

    English summary
    A video call gave a positive nod to Yediyurappa today morning to stake a claim in Karnataka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X