பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தலில் நிற்கும் பிரகாஷ் ராஜுக்கு முழு ஆதரவு.. ஆம் ஆத்மி அதிரடி.. பிரச்சாரம் செய்யவும் முடிவு!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவெடுத்திருக்கும் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு அளிப்பதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக பிரகாஷ் ராஜ் அறிவிப்பு

    பெங்களூர்: நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட முடிவெடுத்திருக்கும் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு அளிப்பதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    நாடாளுமன்ற தேர்தல் களம் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த வருடம் ஏப்ரல் இறுதியிலோ, மே தொடக்கத்திலோ நாடாளுமன்ற தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த தேர்தலில் போட்டியிட போவதாக பிரகாஷ்ராஜ் ஏற்கனவே அறிவித்து இருந்தார். சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறினார்.

    அறிவிப்பு அளித்தார்

    புத்தாண்டு அன்று டிவிட் செய்த பிரகாஷ்ராஜ், இந்த வருடம் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போகிறேன், எங்கு போட்டியிடுவேன் என்பதை பின்பு அறிவிக்கிறேன். மக்களின் ஆட்சி இனி அமையும் ''ஆப்கி பார் ஜனதா சர்க்கார்''. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பேன், என்று வெளிப்படையாக தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார்.

    ஆதரவு அளிக்கிறது

    ஆதரவு அளிக்கிறது

    அவர் தனது டிவிட்டில் சொன்னது போலவே, தற்போது மத்திய பெங்களூர் தொகுதியில் லோக் சபா தேர்தலில் போட்டியிட போவதாக தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் பிரகாஷ்ராஜுக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்து இருக்கிறது. பிரகாஷ்ராஜுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு அளிப்பதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    மணிஷ் சிசோடியா

    மணிஷ் சிசோடியா

    இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவரும், டெல்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா பிரகாஷ்ராஜை சந்தித்து பேசினார். பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். இவர்கள் நேர்மையாக, தைரியமாக, அரசு செய்யும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். அவரின் அரசியல் அறிவிப்பை நான் வரவேற்கிறேன் என்று மணிஷ் சிசோடியா கூறியுள்ளார்.

    நிற்க வைக்காது

    நிற்க வைக்காது

    அதோடு பிரகாஷ்ராஜுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சி பிரச்சாரம் செய்யும். ஆம் ஆத்மி கட்சி பிரகாஷ்ராஜுக்கு எதிராக வேட்பாளரை நிற்க வைக்காது. அவரின் தேர்தல் வெற்றிக்கு ஆம் ஆத்மி கண்டிப்பாக உழைக்கும் என்றும் மணிஷ் சிசோடியா கூறியுள்ளார்.

    English summary
    Aam Aadmi Party extends its support to Prakash Raj for Lok Sabha Election 2019.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X