பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Accenture Layoff : 1 அல்ல.. 2 அல்ல.. 7 மாத சம்பளம் கொடுக்கும் அக்சென்சர்.. ஊழியர்கள் ஷாக்!

Google Oneindia Tamil News

பெங்களுரூ: உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான அக்சென்சர் தனது ஊழியர்களில் 5 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. தானாக முன்வந்து ராஜினாமா செய்பவர்களுக்கு 7 மாத ஊதியம் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

உலகின் முன்னணி ஐடி நிறுவனம் அக்சென்சர் . அந்த நிறுவனத்தில் உலகம் முழுவதும் 5 லட்சம் ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

இந்தியாவில் மட்டும் 2 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். அக்சென்சர் நிறுவனம் இந்தாண்டு தனது செலவுகளை குறைக்க திட்டமிட்டுள்ளது.

விவசாயிகள் வளமாக இருந்தால்தான் தேசம் வலிமையாக இருக்கும்- மோடி விவசாயிகள் வளமாக இருந்தால்தான் தேசம் வலிமையாக இருக்கும்- மோடி

10000 ஊழியர்கள் நீக்கம்

10000 ஊழியர்கள் நீக்கம்

இதற்காக அனைத்து மட்டத்திலும் உள்ள அதன் ஊழியர்களில் 5 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப் போவதாக அறிவித்தது. அதில் 5 சதவீதம் என்றால் குறைந்தபட்சம் 10,000 ஊழியர்கள் இந்தியாவில் மட்டும் பணிநீக்கம் செய்யப்பட உள்ளார்கள்.

3 மாத சம்பளம்

3 மாத சம்பளம்

இந்நிலையில் வழக்கமாக பணிநீக்கம் செய்யும் போது, 1, 2 அல்லது அதிகப்படியாக 3 மாதம், இல்லையெனில் நிறுவனத்தில் அந்த ஊழியர் பணியாற்றிய வருடத்திற்கு இணையான மாத சம்பளத்தை Severance Payout ஆக ஐடி நிறுவனங்கள் வழங்கும்.

ஏழு மாத சம்பளம்

ஏழு மாத சம்பளம்

ஆனால் தற்போது அக்சென்சர் நிறுவனம் 7 மாத Severance Payout வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் இது தானாக முன்வந்து பணியை ராஜினாமா செய்து வெளியேறும் ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அக்சென்சர் அறிவித்துள்ளது.. இந்த 7 மாத Severance Payout வழங்கப்படுவதில், 3 மாத நோட்டீஸ் பீரியடுக்கு பதிலான சம்பளம், கூடுதலாக 4 மாத சம்பளம் நிறுவனத்தை விட்டு வெளியேறுவோருக்கும் வழங்கப்பட உள்ளது.

யாரெல்லாம் நீக்கம்

யாரெல்லாம் நீக்கம்

இந்த பணி நீக்கம் குறித்து அக்சென்சர் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்: "இந்த ஆண்டு, எங்கள் வணிகத்தின் அனைத்து மட்டத்திலும் சுமார் 5% பேரை பணி நீக்கம் செய்யப்போகிறோம் சிறப்பாக செயல்படாத, குறைவான திறன் உடையவர்களை அடையாளம் காண்போம், அந்த நபர்கள் மட்டுமே நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பணிதான் என்றார்.

English summary
Accenture is offering a seven-month severance payout to employees impacted by its latest layoffs. The package is high considering most companies offer a two-three months’ payout, or one month of salary for every year of service put in. The package is applicable to employees voluntarily tendering resignations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X