• search
பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பெங்களூருக்கு கனவுகளை சுமந்து வந்த சென்னை பெண்.. 13 நாளில் தொலைந்த வாழ்க்கை.. நடந்த துயரம்

Google Oneindia Tamil News

பெங்களூரு: வேலை தேடி சென்னையில் இருந்து பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டிக்கு கனவுகளை விரித்து பறந்து வந்த இளம் பெண், 13 நாளிலேயே வாழ்க்கையை தொலைத்துவிட்டார். வேலைக்கு சேர்ந்த இரண்டு நாளில் மேம்பாலத்தில் அதிவேகத்தில் வந்த கார் மோதி நண்பருடன் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு கனவுகளின் நகரம், ஆனால் போக்குவரத்து நெருக்கடியில் உண்மையிலேயே நரகம்கைகளில் தவலும் ஏழாம் அறிவாம் செல்போனுக்கும், கணிணிகளுக்கும் . தகவல் தொழில்நுட்பத்தை உருவாக்க, மென்பொருள்களை படைக்க தினசரி அக்னி சிறகுகளாக பல பெண்கள் பல பறந்து வருகின்றனர்.

தகவல் தொழில் நுட்பத்தில் பட்டப்படிப்பு முடிந்த உடன், அமெரிக்காவின் சிலிக்கான் வேலிக்கு போகும் ஆசைகளை சுமந்தபடி, இந்தியாவின் சிலிகான் வேலியாம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டிக்கு வரும் பெண்கள் ஏராளம். அப்படி வரும் பெண்கள் பலர், வேலைக்கு சேர்ந்த சில மாதத்தில் பல ஆயிரம் சம்பளம், ஹைடெக் வாழ்க்கை, நடை, உடை என இதுவரை பாத்திராத மாற்றங்களை சந்திப்பார்கள்.

கோழிக்கோடு விமான விபத்து நடந்தது எப்படி.. 257 பக்க விசாரணை அறிக்கையில் பகீர் தகவல் கோழிக்கோடு விமான விபத்து நடந்தது எப்படி.. 257 பக்க விசாரணை அறிக்கையில் பகீர் தகவல்

உயிரிழப்பு

உயிரிழப்பு

இதை பொருளதார சுதந்திரம் என்ற ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடலாம். அப்படியான வாழ்வியலை தேடி வந்தவர் தான் கிருத்திகா(28) அவரது கனவை தகர்த்துள்ளது பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி சாலை விபத்து. 13 நாட்களுக்கு முன்பு தான் பெங்களூரு வந்தவர், வேலைக்கு சேர்ந்து 2 நாட்களே ஆகியுள்ள நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்தார்.

ப்ரீத்தம்குமார்

ப்ரீத்தம்குமார்

ப்ரீத்தம் குமார் (30) என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு வந்து தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு கிருத்திகாவுடன் பழக்கம் ஏற்பட்டது. பணி நிமித்தமாக ப்ரீத்தம் குமார் ஜே.பி நகரில் தனது நண்பர்களுடன் குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வசித்து வருகிறர்.

முதல் முறை

முதல் முறை

கிருத்திகா பெங்களூருவிற்கு முதல்முறையாக 13 நாட்களுக்கு முன்பு வந்துள்ளார். மகாதேவபுராவில் உள்ள பிரபல எம்.என்.சி நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்கிறது.. இதற்காக தனியாக வீடு எடுத்து வாடகைக்கு வசித்து வந்த கிருத்திகா, 2 நாட்களுக்கு முன்பு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து இருக்கிறார். செவ்வாய்க்கிழமை இரவு கிருத்திகா பெங்களூருவை சுற்றி காண்பிக்கும்படி நண்பர் ப்ரீத்தம் குமாரிடம் கேட்டுள்ளார்.

சாலை விபத்து

சாலை விபத்து

அதை ஏற்ற அவர், தனது நண்பர் ஒருவரின் சென்னை பதிவு எண் கொண்ட புல்லட் பைக்கில் அவரை அழைத்து சென்றார். எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் உள்ள லே -பையில் நின்றபடி பெங்களூருவின் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்தனர். விபத்து நடப்பதற்கு முன்னதாக கிருத்திகா, நண்பர் குமாரிடம், லே-பையில் நடந்து செல்லலாம் என்று கூறியிருக்கிறார். அதற்கு குமார் சரி என்று கூறிவிட்டு இறங்க முயற்சிப்பதற்குள் அதிவேகத்தில் வந்த கார் பயங்கரமாக மோதியது.

மது போதை காரணமா

மது போதை காரணமா

இருவரும் செல்போன்களில் போட்டோ எடுத்துக்கொண்டிருந்த தருணத்தில் விபத்து நடந்து இருக்கிறது. 25 அடி உயரத்தில் இருந்து விழுந்ததால் கிருத்திகாவின் கழுத்து, முதுகெலும்பு முற்றிலும் முறிந்து உயிரிழந்தார். இதேபோல் ப்ரீத்தம் குமாரும் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தி நிதீஸ் (23) என்ற கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். அவர் குடிபோதையில் இருந்தாரா அதுதான் விபத்துக்கு காரணமா என்ற விசாரணை நடந்து வருகிறது. மாணவரின் அசுர வேகம், இளம் பெண்ணின் வாழ்க்கையை அழித்துவிட்டது.

English summary
The young woman, who flew from Chennai to Bangalore Electronic City in search of work, lost her life in 13 days. Two days after joining the work force, she was killed in a speeding car crash on the flyover.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X