பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெங்களூரையே ஸ்தம்பிக்க வைத்த பிங்க் சேலை பெண்கள்!

Google Oneindia Tamil News

இளஞ்சிவப்பு நிற சேலை உடையணிந்து, 10,000 க்கும் மேற்பட்ட 'அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHAs), இன்று பெங்களூர் நகரின் மையப் பகுதியையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டனர்.

சிட்டி ரயில் நிலையத்திலிருந்து சுதந்திர பூங்காவிற்கு அவர்கள் அணிவகுத்துச் சென்றபோது, அது மகளிரா அல்லது கடல் அலையா என்ற சந்தேகம் காண்போருக்கு வந்துவிட்டது. சுமார் 2 கி.மீ தூரமுள்ள இந்த பகுதி முழுக்க ஸ்தம்பித்தது.

Accredited Social Health Activists (ASHAs) stage protest rally in Bengaluru with Pink saree

நிலையான மாதாந்திர கவுரவத் தொகையாக தங்களுக்கு தலா ரூ .12,000 வழங்கப்பட வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கையாக இருந்தது.

தங்களுக்கு வழங்கப்படும் ஊதியமான ரூ .3500, கடந்த 15 மாதங்களாக வழங்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினர். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் சுகாதார அமைச்சர் பி.ஸ்ரீராமுலுவை சந்தித்து, இதுபற்றி பேசியும் பலனில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

Accredited Social Health Activists (ASHAs) stage protest rally in Bengaluru with Pink saree

AIUTUC இன் மாநிலக் குழு உறுப்பினர் ரமா இதுபற்றி கூறுகையில், "கர்நாடகாவில் 41,000 'ஆஷா' தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் 20% பேர் மட்டுமே தொடர்ந்து சம்பளத்தைப் பெறுகிறார்கள், மீதமுள்ளவர்கள் எதுவும் இல்லாமல் வேலை பார்க்கிறார்கள். இருந்தபோதிலும், அவர்கள் வேலையை தொடரத்தான் செய்கிறார்கள். அவர்கள் எவ்வளவு காலம் காத்திருக்க முடியும். அவர்களின் சம்பளத்தை அரசு உடனடியாக கொடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். " என்றார்.

மொத்தத்தில் இந்த பிங்க் பெண்கள் போராட்டம் மொத்த பெங்களூரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

டிரம்ப் சொன்னார்.. கதையை முடித்தோம்.. ஈரானின் சக்தி வாய்ந்த தலையை காலி செய்த அமெரிக்க ராணுவம்! டிரம்ப் சொன்னார்.. கதையை முடித்தோம்.. ஈரானின் சக்தி வாய்ந்த தலையை காலி செய்த அமெரிக்க ராணுவம்!

English summary
Accredited Social Health Activists (ASHAs) from all over Karnataka during a protest rally from Bengaluru Railway station to Freedom Park against the state government demanding permanent jobs and hike in salaries, in Bengaluru.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X