இந்தி.. நான் சொன்னதைத்தான் பிரதமர் மோடியும் சொல்லியிருக்காரு.. நடிகர் கிச்சா சுதீப் பரபரப்பு
பெங்களூர்: மொழி குறித்து நான் கூறிய கருத்தைத்தான் பிரதமர் நரேந்திர மோடியும் தெரிவித்திருக்கிறார் என கன்னட நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக இந்தி திணிப்புக்கு தென்னிந்தியாவில் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்தி திணிப்பை எதிர்த்து நடிகர்களும் பேச முன்வந்துள்ளனர். தென்னிந்திய மொழிகளில் உருவாகும் படங்கள் இந்தியிலும்உலக அளவிலும் கவனத்தை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சாதனை புரிந்து வருகிறது.
இந்தநிலையில் கடந்த மாதம் திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்ட கன்னட நடிகர் கிச்சா சுதீப இந்தி தேசிய மொழி அல்ல என்று கருத்து தெரிவித்திருந்தார்.
குவாட் தலைவர்கள் உச்சி மாநாடு... பிரதமர் மோடி நாளை ஜப்பான் பயணம்

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்
இதற்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், இந்திதான் நமது தாய் மொழி, தேசிய மொழி என தெரிவித்திருந்தார். அதன்பிறகு இருவரும் ட்விட்டரில் மாறி மாறி கருத்துகள் தெரிவித்ததால் பெரும் சர்ச்சையாக மாறியது. அஜயின் கருத்து வடஇந்திய நடிகர், நடிகைகளும் கிச்சாவின் கருத்துககு தென்னிந்திய நடிகர், நடிகைகளும் ஆதரவு தந்தனர்.

சர்ச்சை
இந்தி மொழி சர்ச்சை முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே இருக்கிறது. தமிழகததிலும் தொடர்ந்து இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு நிலவி வருகிறது. இதனிடையே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற பாஜக அலுவலக பொறுப்பாளரகளுக்கான மாநாடாட்டில் இணைய வழியில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி.

இந்தியாவின் அடையாளம்
அப்போது அவர் பேசுகையில் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம்தான். கடந்த சில நாட்களாக மொழி அடிப்படையில் சர்ச்சைகளைக் கிளப்ப சில முயற்சிகள் நடப்பதை பார்க்கிறோம். ஒவ்வொரு மாநில மொழியிலும் இந்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பை பார்க்கிறது.

தேசியக் கல்விக் கொள்கை
தேசியக் கல்வி கொள்கையில் கூட அனைத்து பிராந்திய மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடியின கருத்தை வரவேற்பதாக நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்தி இனி நமது தேசிய மொழி அல்ல என கூறி நான் கலகத்தையோ விவாதத்தையோ ஏற்படுத்தவில்லை.

பிரதமரின் வார்த்தைகள்
எந்த வித நோக்கமுமின்றி தன்னிச்சையாக நிகழ்ந்தது அது. எனது கருத்தை நான் முன் வைத்தேன். அவ்வளவுதான். பிரதமரின் வார்த்தைகளில் இது வெளிப்பட்டது ஒரு வித பெருமையாகவும் பாக்கியம் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. நான் கன்னட மொழிக்காக மட்டும் பேசவில்லை. எல்லா மொழிகளும் மதிக்கப்பட வேண்டும் என பிரதமர் பேசிய கருத்தைத் தான் நானும் அன்றைக்கு முன் வைத்தேன். மோடியை அரசியல்வாதியாக மட்டும் பார்க்காமல் ஒரு தலைவராகவும் பார்க்கிறோம் என சுதீப் தெரிவித்துள்ளார்.