பிரபல நடிகர் கொடூர கொலை.. ராத்திரி நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்.. "அது"தான் காரணமா?
பெங்களூரு: சினிமா நடிகரை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..!
சினிமா பிரபலங்கள் மரணங்களில் மட்டும் மர்மங்கள் ஓய்வதேயில்லை.. அது தொடர்பான விசாரணைகளும் நடத்தி முடிக்கப்படுவதிலலை.. அது தொடர்பாக யாருமே கைதாவதும் இல்லை..
இந்த பிரபலங்களின் மரண முடிச்சுகள் அவிழ்க்கப்படாமலேயே தொடர்ந்து வருவது, சினிமா துறையில் மட்டுமே சாத்தியம்.. தமிழ், தெலுங்கு உலகம் முதல், முதல் ஹாலிவுட் சினிமா துறைகள் வரை பொருந்தும் உண்மை இது.
எல்லாம் இந்த அரை ஜான் வயித்துக்காகத்தான்.. போலீசாரையே தலை சுற்ற வைத்த கொலை வழக்கு!

சின்னத்திரை சித்ரா
அன்று படாபட் ஜெயலட்சுமி, சில்க் ஸ்மிதா முதல் இன்னும் விஜே சித்ரா வரை, எந்த மரணத்துக்கும் விடை கிடைக்கவில்லை.. இப்படித்தான், கடந்த ஜனவரியில் வங்கதேசத்தை சேர்ந்த ரைமா இஸ்லாம் ஷிமு கொடூரமாக கொல்லப்பட்டார்... கொஞ்ச நாளைக்கு முன்பு, காஷ்மீரில் நடிகை அமரீன் பட் 2 தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்... ஹரியானா பாடகி சங்கீதா கொல்லப்பட்டார்.. பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா மர்ம நபர்களால் துப்பாக்கியால் கொல்லப்பட்டார்.. இபபோது கர்நாடகாவில் இன்னொரு துயரம் நடந்துள்ளது.

நடிகர் சதீஷ்
பெங்களூருவில் வசித்து வந்தார் பிரபல நடிகர் சதீஷ் வஜ்ரா.. இவர் டிவி சீரியல்களிலும் மிகவும் பிரபலமானவர்.. 36 வயதாகிறது.. லகோரி என்ற கன்னட படத்தில் நடித்து, மக்களிடையே பேசப்பட்டவர்.. இவருக்கு திருமணமாகிவிட்டது.. ஆனால், மனைவிக்கும் இவருக்கும் ஏதோ தகராறு இருந்திருக்கிறது.. அடிக்கடி இவர்கள் சண்டை போட்டு கொண்டு வந்துள்ளனர்.. ஒருகட்டத்தில், மனம் வெறுத்துப்போன மனைவி, சில தினங்களுக்கு முன்புதான் தற்கொலை செய்து கொண்டார்..

பாமீதா
இதனால், மனைவி குடும்பத்தினர் சதீஷ் மீது கடுமையான ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. அதனாலேயே, சதீஷை அவரது மச்சான் கொன்றிருக்கலாம் என்கிறார்கள்.. சதீஷின் மனைவி பெயர் பாமீதா.. இவர்கள் காதலித்துதான் திருமணம் செய்துள்ளனர்.. அக்கா மரணத்திற்கு காரணம் சதீஷ் தான் என்று அவர் மீது, மச்சான் கோபமாக இருந்து வந்துள்ளார்.. அந்த கோபத்தில்தான், சதீஷை சரமாரியாக கத்தியால் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது..

விக்டோரியா ஹாஸ்பிடல்
நேற்றிரவு சதீஷ் வீட்டிற்கு வந்திருக்கிறார்.. வீட்டின் முன்பக்க தாழ்வாரத்தை, அந்த வீட்டு ஹவுஸ் ஓனர் கிளீன் செய்துள்ளார்.. அப்போதுதான், ரத்தக்கறையை பார்த்துள்ளார்.. பிறகு உடனே வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் சதீஷ்... அவரை அக்கம்பக்கத்தினர் சேர்ந்து, மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக விக்டோரியா அரசு மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர்.. ஆனால், டாக்டர்கள் போராடியும் அவரை காப்பாற்ற முடியவில்லை.. பரிதாபமாக உயிர் பிரிந்துள்ளது.

ஹவுஸ் ஓனர்
வீட்டிலிருந்து வெளியேறிய ரத்தத்தை பார்த்துவிட்டு, அதிர்ந்துபோன ஹவுஸ்ஓனர், உடனே தன்னுடைய வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவை போட்டு பார்த்துள்ளார்.. அப்போதுதான், நள்ளிரவு 12:30 மணிக்கு 2 மர்ம நபர்கள் வந்துபோனது அதில் தெரிந்துள்ளது.. அவர்கள் திரும்பி போகும்போது, சதீஷின் பைக்கையும் எடுத்து சென்றார்களாம்... ஹவுஸ் ஓனர் சொன்ன அடையாளங்களை வைத்தும், சிசிடிவி கேமராவை வைத்தும், ஆர் ஆர் நகர் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்..

மச்சான்கள்
அதன்பிறகுதான், மச்சான்கள் மீது சந்தேகம் திரும்பி உள்ளது.. இந்த கொலை சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாமீதாவின் சகோதரர்கள் சுதர்சன், நாகேந்திரன் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்... விரைவில் குற்றவாளிகளை கைது செய்து விடுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்..!