பல் வலிக்கு சிகிச்சை.. பிரபல நடிகையின் முகம் வீங்கியது.. 20 நாட்களாக அவதி!
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பல் சிகிச்சை பெற்ற நடிகையின் முகம் வீங்கிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் ஜே பி நகரில் வசித்து வருபவர் சுவாதி. இவர் கன்னட நடிகை. ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சுவாதிக்கு பல் வலி ஏற்பட்டது.
மதியம் 3 மணி முதல் அதிகாலை 1 மணி வரை நடந்த கூட்டம்! 10 மணி நேரம் என்ன ஆலோசித்தார் திருமாவளவன்!
இதற்காக அவர் ஹெண்ணூரில் உள்ள தனியார் பல் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு ஒரு மருத்துவர் சிகிச்சை அளித்தார்.

பல் வலி
அப்போது பல் வலிக்கு மாத்திரை கொடுப்பதற்கு பதிலாக ஒரு ஊசியை கொடுத்து அதை சுவாதியே செலுத்திக் கொள்ளும்படி கூறியதாக தெரிகிறது. அதன்பேரில் மருத்துவர் சொன்ன ஊசியை வாங்கிக் கொண்டு வந்த சுவாதி தனது வீட்டில் ஊசியை பல் ஈறு பகுதியில் செலுத்தினார்.

சுவாதியின் முகம் வீக்கம்
இதையடுத்து சிறிது நேரத்தில் சுவாதியின் முகம் நன்றாக வீங்கி முகத்தின் அமைப்பே மாறிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுவாதி சிகிச்சை அளித்த மருத்துவரை தொடர்பு கொண்டு முகம் வீக்கம் குறித்து தெரிவித்துள்ளார். அதற்கு அவர் பல் ஈறில் ஊசி போட்டுக் கொண்டதால் அப்படித்தான் இருக்கும். விரைவில் முகம் வீக்கம் சரியாகிவிடும் என தெரிவித்திருந்தார்.

20 நாட்கள்
ஆனாலும் சரியாகவில்லை. இதனால் சுவாதி கடந்த 20 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். 20 நாட்களாகியும் முகம் சரியாகாததால் அவர் மீண்டும் மருத்துவமனையை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு யாரும் சரியாக பதில் சொல்வது இல்லை என்றும் சுவாதி குற்றம்சாட்டை முன் வைத்துள்ளார்.

மாடல்
ஏற்கெனவே மாடல் ரைசா வில்சன் தோல் சிகிச்சைக்காக சென்னையில் ஒரு மருத்துவரிடம் போன போது அவரது முகம் வீங்கியது. இதையடுத்து பெங்களூரில் ஒரு நடிகை தனது உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்க சிகிச்சை எடுத்த போது உயிரிழந்துவிட்டார். ஆனால் சுவாதிக்கு சாதாரண ஒரு பல் சிகிச்சைக்கு முகம் வீங்கிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.