பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிறையில் சசிகலாவை திடீரென சந்தித்த நடிகை விஜயசாந்தி.. 1 மணி நேரம் ஆலோசனை.. பரபரப்பு பின்னணி தகவல்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    சிறையில் சசிகலாவை சந்தித்த விஜயசாந்தி, பரபரப்பு பின்னணி தகவல்கள்

    பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை நடிகை விஜயசாந்தி சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    நடிகை விஜயசாந்தி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்த விஜயசாந்தி ஐபிஎஸ், மன்னன் உள்ளிட்ட படங்கள் பிரபலமானவை.

    சினிமாவில் நடிப்பதை விட்டு விட்டு 1998-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். பின்னர் அங்கிருந்து விலகி தள்ளி தெலுங்கானா என்ற கட்சியை தொடங்கினார். இதையடுத்து அக்கட்சியை கலைத்துவிட்டு தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியில் இணைந்தார்.

    காங்கிரஸ் கட்சியில்

    காங்கிரஸ் கட்சியில்

    2009-ஆம் ஆண்டு மேடக் தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆனார். இதைத் தொடர்ந்து 2014-ஆம் ஆண்டு கேசிஆர் கட்சியிலிருந்தும் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    சசிகலாவுடன் ஆலோசனை

    சசிகலாவுடன் ஆலோசனை

    நாடாளுமன்றத் தேர்தல் வருவதையொட்டி காங்கிரஸ் கட்சிக்காக தீவிரமாக உழைத்து வருகிறார். இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரபரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை நேற்று சந்தித்து பேசினார்.

    ஆலோசனை செய்து விட்டு

    ஆலோசனை செய்து விட்டு

    அவருடன் சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் பேசி கொண்டிருந்தார். இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் கூட்டணிக்கு அவரது ஆதரவைக் கேட்டதாக தெரிகிறது. சசிகலாவும் கட்சியினருடன் கலந்து ஆலோசனை செய்துவிட்டு பதில் சொல்வதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.

    ஆதரவு

    ஆதரவு

    சசிகலாவுடன் விஜயசாந்தி நெருக்கம் காட்டி வருகிறார். கணவர் எம். நடராஜன் மறைந்த போதும் சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். மேலும் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனை ஆதரித்து பிரசாரம் செய்திருந்தார்.

    English summary
    Actress and Congress activist Vijayasanthi meets Sasikala in Parappana Agrahara Prison. They discussed for 1 hour.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X