பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2006ல் குமாரசாமி ஆடிய விளையாட்டு.. அஜீத் பவாரும் அதே ஆட்டம்.. கர்நாடகாவை மிஞ்சிய மகாராஷ்டிரா!

2006-ல் கர்நாடக நிகழ்வு போலவே மகாராஷ்டிர அரசியலில் திருப்பம் ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. அஜீத் பவார் பிரிந்து வர இதுதான் காரணமா?

    பெங்களூர்: மகாராஷ்டிராவில் இன்று நடந்த இதே மாதிரியான ஒரு அரசியல் விளையாட்டு ஏற்கனவே 2006ல் நடந்து விட்டது. அப்போது அதன் காரண கர்த்தாவாக திகழ்ந்தவர் முன்னாள் முதல்வர் குமாரசாமி.

    இன்று காலை திடீரென மகாராஷ்டிராவில் ஒரு அதிரடித் திருப்பம். ஊடகங்களுக்குக் கூட தெரியாமல் ஒரு சம்பவம் அரங்கேறியது. பட்னவீஸ் முதல்வரானார். அதை விட பெரிய அதிர்ச்சி என்னவென்றால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் அஜீத் பவார் துணை முதல்வராக பதவியேற்றதுதான். இதைத்தான் யாரும் எதிர்பார்க்கவில்லை.

    இப்போது காங்கிரஸ் மற்றும் சிவசேனாவின் வாயில் விழுந்து கொண்டிருக்கிறார் அஜீத் பவார். அவரது செயலை பலரும் கடுமையாக கண்டித்து வருகின்றனர். இங்குதான் நாம் ஒரு பிளாஷ்பேக்கை பார்க்க வேண்டியுள்ளது.

    105 ஐ விட 56 பெரியது.. வாதிட்ட கணித மேதைகள்.. நல்ல பாடம் கிடைச்சிருச்சு.. எச். ராஜா பலே!105 ஐ விட 56 பெரியது.. வாதிட்ட கணித மேதைகள்.. நல்ல பாடம் கிடைச்சிருச்சு.. எச். ராஜா பலே!

    தரம்சிங்

    தரம்சிங்

    கர்நாடகாவில் கடந்த 2014ம் ஆண்டு சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது. தேர்தலில் யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தன. காங்கிரஸ் கட்சியின் தரம்சிங் முதல்வராகப் பொறுப்பேற்றார். இந்த ஆட்சி 2 ஆண்டுகள் வரை நீடித்தது.

    எச்.டி.குமாரசாமி

    எச்.டி.குமாரசாமி

    2016ம் ஆண்டு பெரும் திருப்பங்கள் அரங்கேறின. மதச்சார்பற்ற ஜனதாதளத்திலிருந்து கணிசமான எம்எல்ஏக்களுடன் வெளியேறி வந்தார் எச்டி குமாரசாமி. வந்தவர், பாஜகவுடன் கூட்டணி வைத்தார். ஆட்சியையும் கைப்பற்றினார். முதல்வரும் ஆனார். எடியூரப்பா துணை முதல்வராக பொறுப்பேற்றார்.

    புனிதமற்ற கூட்டணி

    புனிதமற்ற கூட்டணி

    குமாரசாமியின் இந்த செயலால் பெரும் அதிர்ச்சி அடைந்தார் மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் தலைவரும், குமாரசாமியின் தந்தையுமான எச்டி. தேவெ கெளடா. இந்த செயலுக்கும், தனக்கும் தொடர்பில்லை என்று அறிவித்தார். இது புனிதமற்ற கூட்டணி என்றும், எனது மகன் முடிவை நான் ஏற்கவில்லை, அவருக்கு எனது ஆசிர்வாதமும் கிடையாது என்றும் அரிவித்தார். சொன்னதோடு நிற்கவில்லை. பல மாதங்களாக தனது மகனுடன் அவர் பேசவில்லை. விலகியே இருந்தார். பின்னர் குடும்பத்தினர் தலையிட்டு மகனையும், தந்தையையும் சமரசப்படுத்தி சேர்த்து வைத்தனர்.

    திடீர் பல்டி

    திடீர் பல்டி

    இதற்கு பிறகு, பாஜக - குமாரசாமி இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி முதல்வர் பதவியை எடியூரப்பாவுக்கு குமாரசாமி கொடுக்க வேண்டிய நேரம் வந்தது. எடியூரப்பாவும் முதல்வராகப் பதவியேற்றார். ஆனால் குமாரசாமி ஆதரவை வாபஸ் வாங்கி பல்டி அடித்தார். எடியூரப்பா ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று. அதாவது குமாரசாமியின் நம்பிக்கை துரோகத்தால் எடியூரப்பா ஆட்சி கவிழ்ந்தது.

    அஜித்பவார்

    அஜித்பவார்

    அதன் பின்னர் 2008ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் எடியூரப்பா ஆட்சியைப் பிடித்தார். பாஜக ஆட்சியமைத்தது. அதுதான் தென்னிந்தியாவில் அமைந்த முதல் பாஜக ஆட்சியாகும். கிட்டத்தட்ட இப்போதும் இதே கதைதான் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. சரத்பவாருக்கு துரோகம் செய்து விட்டு அவரது அண்ணன் மகன் அஜீத் பவார் பாஜக ஆட்சியில் பங்கேற்றுள்ளார். அஜீத் பவார் செயலை பகிரங்கமாக நிராகரித்துள்ளார் சரத் பவார்.

    குமாரசாமி செய்தது போல நாளை அஜீத் பவாரும் பல்டி அடிப்பாரா, பாஜக ஆட்சி கவிழுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English summary
    maharashtra govt: ajit pawar does a kumarasamy in maharashtra govt formation
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X