பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமேசான்.அடுத்த அதிரடி.. விரைவில் வீட்டிற்கே வந்து மருந்து வழங்க போகுது!

Google Oneindia Tamil News

பெங்களூரு: உலகின் மாபெரும் இ-காமர்ஸ் நிறுவமான அமேசான் இந்தியாவில் ஒரு ஆன்லைன் மருந்து விற்பனையை பெங்களூருவில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

மருந்து விற்பனையாளர்கள், மின் மருந்தகங்கள் மற்றும் மருந்துக் கடைகள், இந்தியாவில் ஒரு புதிய போட்டியாளரைக் எதிர்கொள்ளப் போகின்றன.

உலகின் மாபெரும் இ-காமர்ஸ் நிறுவமான அமேசான் இந்தியாவில் ஒரு ஆன்லைன் மருந்து விற்பனையை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது, பெங்களூருவில் முதல் கட்டமாக இந்த சேவையை தொடங்க உள்ளது.

விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ்.. தமிழக முதல்வர் அதிரடி.. ஆக. 17ம் தேதி முதல் புதிய தளர்வு விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ்.. தமிழக முதல்வர் அதிரடி.. ஆக. 17ம் தேதி முதல் புதிய தளர்வு

ஆன்லைன் மருந்து

ஆன்லைன் மருந்து

ஆன்லைனில் மொபைல் போன்கள் தொடங்கி எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் அனைத்தையும் விற்பனை செய்து வந்த அமேசான், பின்னாளில் துணிகளையும் விற்பனை செய்ய தொடங்கியது. அதன்பிறகு வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களையும் விற்பனை செய்ய தொடங்கியது. கட்டில் பீரோ என அனைத்தையும் விற்று வரும் அமேசான் அடுத்ததாக தற்போது ஆன்லைனில் மருந்தையும் விற்க போகிறது. இதன் மூலம் ஆன்லைன் சந்தையில் அமேசான் தனது எல்லையை நீண்ட தூரத்திற்கு விரிவுபடுத்தி உள்ளது.

அனைத்து மருந்துகள்

அனைத்து மருந்துகள்

"அமேசான் பார்மசி" என்ற பெயரில் சேவையை துவக்கும் அமேசான் , மருத்துவர்களின் பரிந்துரைப்படி அளிக்கப்பட வேண்டிய மருந்துகளையும், அடிப்படை மருத்துவ சாதனங்கள் மற்றும் பாரம்பரிய இந்திய மூலிகை மருந்துகள் ஆகியவற்றையும் வழங்க உள்ளதாக ம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிளிப்கார்ட்டுன் போட்டி

பிளிப்கார்ட்டுன் போட்டி

வால்மார்ட்டுக்கு சொந்தமான பிளிப்கார்ட், உலகின் பெருங் கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் ஆன்லைன் மளிகை சேவையான ஜியோமார்ட் மற்றும் பல்வேறு சிறிய ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுடன் இந்தியாவில் தற்போது அதிகப்படியான போட்டியை சந்தித்து வரும் அமேசான் ஆன்லைன் மருந்து விற்பனையில் இறங்கி உள்ளது.

அமேசான் அசத்தல்

அமேசான் அசத்தல்

கடந்த மாதம், அமேசான் நிறுவனம் இந்தியாவில் 10 புதிய கிடங்குகளைத் (warehouses) திறந்ததுடன், வாகன காப்பீட்டையும் புதிதாக வழங்கத் தொடங்கி உள்ளது. இதுமட்டுமின்றி,. அமேசான் ஒரு மாநிலத்தில் மது விநியோகத்திற்கான அனுமதியையும் பெற்றுள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மெடிக்கல் ஷாப்களுக்கு அச்சுறுத்தல்

மெடிக்கல் ஷாப்களுக்கு அச்சுறுத்தல்

ஆன்லைன் மருந்து விற்பனை அல்லது மின் மருந்தகங்களுக்கான விதிமுறைகளை இந்தியா இன்னும் இறுதி செய்யப்படவில்லை.. தற்போதைய நிலையில் , ஆனால் மெட்லைஃப் (Medlife) , நெட்மெட்ஸ் (Netmeds), டெமாசெக் ஆதரவு ஃபார்ம் ஈஸி மற்றும் சீக்வோயா கேபிடல் ஆதரவு 1 எம்ஜி போன்ற பல ஆன்லைன் மருந்து விற்பனையாளர்களின் வளர்ச்சிக்கு மத்தியில் தற்போது அமேசானும் களம் இறங்கி இருப்பது, நாட்டின் பல்வேறு பாரம்பரியமான மருந்து கடைகளை அச்சுறுத்தியுள்ளது.

Recommended Video

    Amazon, Flipkart T20 sale, IPLக்கு முன்பு ஒரு திருவிழா

    English summary
    Amazon said will launch an online pharmacy in India that will serve the southern city of Bengaluru
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X