பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்லாம் தெளிவா பேசுறீங்க.ஏன் விவசாயிகளுக்கு ரூ.6,000 கொடுக்கவில்லை..காங்கிரசுக்கு, அமித்ஷா கேள்வி!

Google Oneindia Tamil News

பெங்களுரு: வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வருமானம் பன்மடங்கு அதிகரிக்க உதவும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

காங்கிரஸ் ஏன் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் கொடுக்கவில்லை? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Amit shah attack on Congress Why not give Rs 6,000 to farmers

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கர்நாடகா மாநிலத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி (ஜே.என்.எம்.சி) மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமித்ஷா பேசியபோது கூறியதாவது:-
நரேந்திர மோடி அரசு விவசாயிகளின் நலனுக்காக பணியாற்றுவதில் உறுதியாக உள்ளது. வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வருமானம் பன்மடங்கு அதிகரிக்க உதவும்.

தற்போது விவசாயிகள் விவசாய உற்பத்தியை நமது நாட்டிலும், உலகில் வேறு எங்கும் எளிதாக விற்க முடியும்.

விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசும் காங்கிரஸ் தலைவர்களை பார்த்து நான் கேட்கிறேன். நீங்கள் ஏன் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் கொடுக்கவில்லை? பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனா அல்லது திருத்தப்பட்ட எத்தனால் கொள்கையை ஏன் உருவாக்கவில்லை?

தென்மாவட்ட மக்களின் குலசாமியான பென்னிகுவிக் 180வது பிறந்தநாள்: ஓ.பி.எஸ், விவசாயிகள் மரியாதை தென்மாவட்ட மக்களின் குலசாமியான பென்னிகுவிக் 180வது பிறந்தநாள்: ஓ.பி.எஸ், விவசாயிகள் மரியாதை

நீங்கள் ஆட்சியில் இருந்தபோது உங்கள் நோக்கம் சரியாக இல்லை என்று அமித்ஷா கூறினார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தலைநகர் நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Union Home Minister Amit Shah said the agricultural laws would help increase the income of farmers manifold
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X