பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித் ஷாதான் காரணம்.. எடியூரப்பா பேசியதாக வெளியான வீடியோவால் பரபரப்பு

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெற்று வந்த மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து, ஆட்சியை கலைத்த விவகாரத்தில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு தொடர்பு இருப்பதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேசியதாக கூறப்படும் ஒரு வீடியோ வைரல் ஆகியுள்ளது.

17 எம்எல்ஏக்கள் ஒருவர் பின் ஒருவராக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த காரணத்தால், கர்நாடகாவில் நடைபெற்ற, மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு சுமார் 3 மாதங்களுக்கு முன்பாக கலைந்தது.

Amit Shah knows Karnataka revolt, says BS Yeddyurappa in a clip

அந்த எம்எல்ஏக்களை அதிரடியாக சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. 100 நாட்கள் ஆட்சியை நிறைவு செய்துள்ள எடியூரப்பா அரசு தற்போது மற்றொரு சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளது.

இனியும் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.. சிவ சேனா கோபம்.. சூடாகும் மகாராஷ்டிரா அரசியல் களம்இனியும் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.. சிவ சேனா கோபம்.. சூடாகும் மகாராஷ்டிரா அரசியல் களம்

எடியூரப்பா பேசுவது போன்ற ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது. அதில் எடியூரப்பா பேசுவதை போல உள்ள வார்த்தைகள் இவைதான்: உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ? 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து அதன் பின்னணியில் இருந்தது எடியூரப்பாவாகிய நான் கிடையாது. ஆனால் நமது கட்சியின் தேசியத் தலைவர் இது பற்றி அறிந்திருந்தார். அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். நடப்பவற்றை அவர் மேற்பார்வையிட்டார்.

அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்பினார்கள். எனவே தங்கள் பதவிகளையும் அவர்கள் தியாகம் செய்தனர். எனவே எது வந்தாலும் நமது கட்சியினர் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இவ்வாறு எடியூரப்பா பேசியதைப் போல அந்த ஆடியோவில் உள்ளது.

இது தொடர்பாக இன்று நிருபர்கள் எடியூரப்பாவிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எடியூரப்பா, அந்த ஆடியோ போலியானது என்று தெரிவிக்கவில்லை. மாறாக, கட்சியின் நலன் தொடர்பாக, நான் பாஜக தொண்டர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். வேறு எந்த தவறும் கிடையாது, என்று தெரிவித்துள்ளார். எடியூரப்பாவின் இந்த கருத்து, எதிர்க்கட்சிகளை உசுப்பேற்றி உள்ளதால், கர்நாடக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

English summary
An audio goes viral that Karnataka Chief Minister BS Yeddyurappa has spoken about BJP leader Amit Shah.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X