பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதெல்லாம் இந்தியாவில் சாத்தியமே இல்லை.. 3 மொழி பேசி அமித் ஷாவுக்கு ஜெய்ராம் ரமேஷ் அட்வைஸ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Amit shah says that Hindi should be the only one language in India

    பெங்களூரு: இந்தியா முழுவதுக்குமான பொதுவான மொழியாக இந்தியை ஆக்க வேண்டும் என்று அமித்ஷா வெளியிட்ட கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், அப்படி செய்வது என்பது ஒரு போதும் சாத்தியமே இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    கர்நாடக தொழில் வர்த்தகசபைக் கூட்டமைப்பு சார்பில் பெங்களூருவில் நேற்று நடந்த விழாவில் ஜெய்ராம் ரமேஷ் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், "என்னால் ஒரே நேரத்தில் பல மொழிகளை பேச முடியாது. அப்படித்தான் இந்தியாவில் பலருக்கும். எனவே இந்தியாவில் ஒரே நாடு, ஒரே மொழியையை அமலப்படுத்துவது கடினம். பல்வேறு மொழி மற்றும் கலாச்சாரத்தை கொண்டு மக்கள் வாழும் நாடாக இந்தியா திகழ்கிறது.

    Amit Shahs Hindi Plea Can Never be Reality : Jairam Ramesh

    இங்கு ஒரே நாடு ஒரே வரி ஒரே தேர்தல் என்பது கூட சாத்தியம் ஆகலாம். ஆனால் ஒரே நாடு ஒரே மொழி கொள்கையை அமல்படுத்துவது எதார்தத்தில் சாத்தியமில்லை. மிகவும் கடினம். இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு.

    மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பாரம்பரியத்தை இழிவுபடுத்தவும் அழிக்கவும் அவரை தினசரி தாக்குகிறார்கள். அவருடைய யோசனைகள் கைவிடப்பட்டால் இந்தியாவின் சிந்தனைகள் செத்துவிடும்.

    அப்படியே செவுலிலேயே ஒரு அறை விடுங்கள்.. இன்னும் திருந்தாமல் தாறுமாறாக பேசிய விஜயகாந்த் மகன்அப்படியே செவுலிலேயே ஒரு அறை விடுங்கள்.. இன்னும் திருந்தாமல் தாறுமாறாக பேசிய விஜயகாந்த் மகன்

    மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், விஷ்வேஸ்வரய்யா (மைசூர் திவான்) உள்ளிட்டோர் அறிவுசார் ஒருமைப்பாடு, நிதி மேலாண்மையில் சிறந்து விளங்கியவர்கள். நாட்டின் வளர்ச்சிக்கு தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள்.இவர்களது வழியை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும்" இவ்வாறு கூறினார்.

    English summary
    We may have one nation-one tax but no circumstances can we have one nation-one culture, one nation-one language: Jairam Ramesh
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X