பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வன்னியர்கள் ஒன்றுபட்டால்... ஆட்சியை பிடிக்கமுடியும் -அன்புமணி ராமதாஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    வன்னியர்கள் ஒன்றுபட்டால்... ஆட்சியை பிடிக்க முடியும்: அன்புமணி

    பெங்களூரு: வன்னியர்கள் ஒன்றுபட்டால் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என பாமக இளைஞரணித் தலைவரும், எம்.பியுமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    பெங்களூருவில் நடைபெற்ற வன்னியர் குல சத்திரிய சேவை சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இந்தக் கருத்தை கூறினார்.

    மேலும், வன்னியர்கள் வரலாறு தொடர்பான அக்கினி என்ற நூலை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு பிரதிகளிலும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா வெளியிட அதனை அன்புமணி பெற்றுக்கொண்டார்.

    அதிமுக கூட்டணியில் சென்னை அல்லது ஆவடி மேயர் பதவி... போட்டியிட விரும்பும் பாமக? அதிமுக கூட்டணியில் சென்னை அல்லது ஆவடி மேயர் பதவி... போட்டியிட விரும்பும் பாமக?

    அன்புமணி பேச்சு

    அன்புமணி பேச்சு

    பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை இப்போது அதிமுக கூட்டணியில் உள்ள நிலையில், அன்புமணி ஆட்சியை பிடிப்பது பற்றி பேசியிருப்பது அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்புமணி ராமதாஸ் பேச்சின் மூலம் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுவதே பாமகவின் இலக்கு என்பது உணர முடிகிறது.

    பெங்களூருவில் விழா

    பெங்களூருவில் விழா

    வன்னியர் குல சத்திரிய சேவை சங்கத்துகான புதிய இணையதளம் தொடங்குதல் மற்றும் புத்தகங்கள் வெளியிடுவதற்காக பெங்களூருவில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும், பாமக எம்.பி.அன்புமணியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

    அன்புமணி அழைப்பு

    அன்புமணி அழைப்பு

    அந்த நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ், கர்நாடகத்தில் வன்னியர் சமுதாயத்தினர் 60 லட்சம் பேர் உள்ளதாகவும், வன்னியர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் பேசினார். மேலும், கர்நாடகாவில் வன்னியர்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் எம்.பி., எம்.எல்.ஏ., போன்ற பதவிகளுக்கு வர முடியும் எனத் தெரிவித்தார்.

    ஒன்றுபட்டால் ஆட்சி

    ஒன்றுபட்டால் ஆட்சி

    தமிழகத்தில் வன்னியர்கள் அதிகமாக இருந்தாலும் கூட இன்னும் முதலமைச்சர் ஆக முடியவில்லை என்றும், ஒவ்வொரு மாநிலத்திலும் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் முதலமைச்சராக ஆகிவிட்டார் எனவும் கூறினார். மேலும், வன்னியர்கள் ஒன்றுபட்டால் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என அன்புமணி கூறினார்.

    அதிமுக அதிர்ச்சி

    அதிமுக அதிர்ச்சி

    அன்புமணி ராமதாஸின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணியை பாமக தொடரும் எனக் கூறப்படும் நிலையில் அன்புமணி ஆட்சியை பிடிப்பது பற்றி பேசியிருக்கிறார்.

    English summary
    anbumani ramadoss says, If the vanniyar unite,the rule can be captured
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X